செய்திகள் :

கோவை மருத்துவமனைக்குள் கத்தியுடன் நுழைந்த இளைஞர் - நூலிழையில் உயிர் தப்பிய செவிலியர்

post image

கோவை அவிநாசி சாலையில் உள்ள  தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருபவர் மல்லிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மருத்துவமனை வளாகத்திள் உள்ள விடுதியில் தங்கி பணியாற்றி வருகிறார். அங்கு ஒரு இளைஞர் நேற்று அத்துமீறி நுழைந்துள்ளார்.

கோவை

அவரை அங்கிருந்த விடுதிக் காப்பாளர் தடுத்துள்ளார். அவரை கடுமையான வார்த்தைகளில் திட்டிவிட்டு உள்ளே சென்றுள்ளார். தொடர்ந்து அவர் மல்லிகாவின் கழுத்தை நெரித்து கத்தியால் தாக்க முயற்சித்துள்ளார்.

அப்போது மல்லிகா தப்பிப்பதற்காக கைகளால் தடுத்துள்ளார். இதனால் கை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து விடுதிக் காப்பாளர்கள் மற்றும் மருத்துவமனை பாதுகாவலர்கள் அங்கு உடனடியாக விரைந்து இளைஞரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சுஜித்

இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை விசாரணையில் அவர் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த சுஜித் என்பது தெரியவந்துள்ளது.

விடுதிக் காப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில் ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிந்து, கைது  செய்து சிறையில் அடைத்தனர்.  விசாரணையில் சுஜித்தும், மல்லிகாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக மல்லிகா சுஜித்திடம் பேசுவதை நிறுத்தியுள்ளார்.

கைது

இதனால் ஆத்திரமடைந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். காயமடைந்த மல்லிகாவுக்கு அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

ஜகபர் அலி கொலை வழக்கு: குற்றவாளிகள் 5 பேரையும் 3 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க CBCID-க்கு அனுமதி!

சட்டவிரோத கனிமக் கொள்ளைக்கு எதிராக புகார் கொடுத்த புதுக்கோட்டை மாவட்டம், வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி கடந்த ஜனவரி 17-ம் தேதி அன்று குவாரி உரிமையாளர்களால் சதி திட்டம் தீட்டப்பட்... மேலும் பார்க்க

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம்: இளைஞனை சுட்டுப்பிடித்த ராணிப்பேட்டை போலீஸ்!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சிப்காட் காவல் நிலையத்தின் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.நள்ளிரவு 12 மணியளவில், முகமூடி அணிந்து பைக்கில் வந்த அட... மேலும் பார்க்க

மும்பையை சுற்றிப்பார்க்க வந்த பெண்; இடமில்லாமல் ரயிலில் உறங்கிய போது பாலியல் வன்கொடுமை..

மும்பையில் தாதர், பாந்த்ரா, மும்பை சென்ட்ரல், குர்லா மற்றும் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் போன்ற இடங்களில் ரயில்வே டெர்மினஸ் இருக்கிறது. இதில், பாந்த்ரா ரயில்வே டெர்மினஸில் நிறுத்தப்பட்டு இருந்த ரயிலில் உற... மேலும் பார்க்க

வேங்கை வயல் வழக்கில் CBCID குற்றப்பத்திரிகை ஏற்பு; வேறு நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றம்..

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் முரண்பாடுகள் உள்ளதாகவும், அதனை ஏற்கக் கூடாது எனவும் புகார் தரரான கனகராஜ் தரப்பு வழக்கறிஞர்கள் ... மேலும் பார்க்க

``மிரட்டல், சித்ரவதையால் தளர்ந்துவிட்டேன்..'' -உறவின் போது காதலனை கழுத்தை நெரித்து கொலை செய்த பெண்

உத்தரப்பிரதேசத்தில் உள்ள பரேலி என்ற இடத்தைச் சேர்ந்தவர் இக்பால்(32). இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் ரகசிய தொடர்பு இருந்தது. இந்நிலையில், இக்பால் அவரது வீட்டிற்கு அருகில் பிணமாக கிடந்தது ... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: `முட்டைப் பொரியலில் விஷம் வச்சுட்டேன்' - காதலை கைவிட மறுத்த மகள்; தாய் செய்த கொடூரம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) அதே பகுதியிலுள்ள ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளங்கலை படித்து வருகிறார்.இவருக்கும் திருத்தணியைச் சேர்ந்... மேலும் பார்க்க