Japan: வேண்டுமென்றே தவறு செய்து, மீண்டும் மீண்டும் ஜெயிலுக்கு போகும் முதியவர்கள்...
'உப்புமா வேண்டாம்; பிரியாணி, சிக்கன் வேண்டும்' - அங்கன்வாடியில் சிறுவனின் கோரிக்கைக்கு அமைச்சர் பதில்!
கேரளத்தில் அங்கன்வாடியில் படிக்கும் சிறுவன், தனக்கு உப்புமாவுக்குப் பதிலாக பிரியாணி வேண்டும் எனக் கேட்டதற்கு கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் பதிலளித்துள்ளார்.
கேரளத்தில் அங்கன்வாடியில் படிக்கும் ஷங்கு என்ற சிறுவன், 'எனக்கு உப்புமாவுக்குப் பதிலாக பிரியாணியும் பொரித்த கோழியும் வேண்டும், அங்கன்வாடியின் உணவுப் பட்டியல் மாற்றப்பட வேண்டும்' என தன் தாயிடம் கேட்ட விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்த விடியோவைப் பார்த்த கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்,
'குழந்தையின் கோரிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். அங்கன்வாடியின் உணவுப் பட்டியல் மதிப்பாய்வு செய்யப்படும்' என்று கூறிய அமைச்சர் சிறுவனின் தாய் மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
அமைச்சர் வீணா ஜார்ஜ், குழந்தை கோரிக்கை வைக்கும் வீடியோவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
இந்த விடியோவுக்குப் பின்னர் சிறுவன் ஷங்குவிற்கு பலரும் பிரியாணியும் சிக்கனும் வாங்கித்டீ தருவதாக சிறுவனின் தாய் கூறியுள்ளார்.