செய்திகள் :

அரசு-ஆளுநர் மோதலால் மக்களுக்கு பாதிப்பு; மசோதாக்களை திருப்பி அனுப்பியிருக்கக் கூடாது: உச்ச நீதிமன்றம்

post image

புது தில்லி: மாநில ஆளுநர் - தமிழக அரசு இடையிலான மோதல் போக்கால் மக்களுக்கே பாதிப்பு என்றும், மசோதாக்களை திருப்பி அனுப்பியிருக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில், ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காகவும், பரிசீலனைக்காகவும் ஆளுநருக்கு அனுப்பப்பட்ட 12 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. அரசியல் சாசனக் கடமையை நிறைவேற்றாமல் தாமதப்படுத்துவது, பரிசீலிக்கத் தவறுவது, செயல்படாமல் இருப்பது, புறக்கணிப்பது போன்ற நடவடிக்கைகளில் அவர் ஈடுபடுகிறார் என்று குற்றம்சாட்டி, தமிழக அரசு தொடர்ந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவதால் அரசுப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் என்று உத்தரவிடுமாறு தமிழக அரசு வாதத்தை முன் வைத்தது.

மேலும், ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாவை பேரவையில் நிறைவேற்றினால் ஆளுநர் அதற்கு ஒப்புதல் தர வேண்டும். கடந்த 12ஆம் தேதி ஜனவரி 2020 முதல் ஏப்ரல் 2023ஆம் ஆண்டு வரை தமிழக அரசு சார்பில் 12 மசோதாக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசு அனுப்பிய மசோதாக்களில் 2ஐ குடியரசுத்தலைவருக்கு ஆளுநர் அனுப்பினார். மற்ற 10 மசோதாக்களை திருப்பி அனுப்பிவிட்டார் என்று தமிழக அரசு சார்பில் கூறப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், 10 மசோதாக்களை திருப்பி அனுப்பினாரா? அவ்வாறு செய்திருக்கக் கூடாது என்று கருத்துத் தெரிவித்தனர்.

மேலும், பல்கலை. துணைவேந்தர் நியமனத்துக்கு ஆளுநர் தடையாக இருப்பதாகவும் தமிழக அரசு சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த மத்திய அரசு தரப்பு வழக்குரைஞர், மசோதாக்கள் தொடர்பாக முன்பே நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. துணைவேந்தர் நியமன வழக்கில் எதிர்தரப்பில் யுஜிசி சேர்க்கப்பட்டாததால் மத்திய அரசால் பதில் தர முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பி அனுப்பிய மசோதாக்களை, பேரவையில் அரசு நிறைவேற்றினால் ஒப்புதல் தர வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

எஃப்ஐஆர் கசிந்த விவகாரம்: பத்திரிகையாளர்களை துன்புறுத்தக் கூடாது - நீதிமன்றம்

சென்னையில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது தொடர்பான முதல் தகவல் அறிக்கை கசிந்த விவகாரத்தில், பத்திரிகையாளர்களை துன்புறுத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம... மேலும் பார்க்க

தமிழகத்தில் அடுத்த 2 நாள்கள் வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை : தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறபட்டுள்ளதாவது: தமிழகம... மேலும் பார்க்க

ஆண்டாள் ஆறுமுகத்தின் ரூ.1,000 கோடி சொத்துகள், ரூ.912 கோடி பணம் முடக்கம்!

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையின் போது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், தொழிலதிபர் ஆண்டாள் ஆறுமுகத்தின் ரூ.1,000 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.912... மேலும் பார்க்க

பிப். 16, 25ல் ஜாக்டோ-ஜியோ போராட்டம் அறிவிப்பு!

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற பிப். 16, 25 ஆகிய தேதிகளில் போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ-ஜியோ கூறியுள்ளது. அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ... மேலும் பார்க்க

எச். ராஜாவுக்கு வீட்டுக் காவல்!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் போராட்டத்துக்கு புறப்பட்ட பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவை காவல்துறையினர் வீட்டுக் காவலில் அடைத்து வைத்துள்ளனர்.அதேபோல், பாஜக மாநிலச் செயலாளர் ராம ஸ்ரீநிவாசனையும் மதுரையில்... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: உச்சகட்ட பரபரப்பு

திருப்பரங்குன்றம் மலைக்கு இன்று பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை என்று காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. திருப்பரங்குன்றத்தில் மட்டும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடு... மேலும் பார்க்க