தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திலிருந்து 1.55 கோடி பேர் நீக்கம்!
காதல் தோல்வி கட்டாயம்; 'Chief Dating Officer' பதவி ஆள்தேடிய நிறுவனம் - முக்கிய கண்டிஷன் இவைதான்!
பெங்களூருவைத் தளமாகக் கொண்ட டாப்மேட் என்ற நிறுவனத்திற்கு தலைமை டேட்டிங் அதிகாரி வேண்டுமென்று சமூக வலைதளங்களில் பதிவிட்டது தற்போது வைரலாகி வருகிறது.
இந்தியாவில் பல்வேறு ஸ்டார்ட்டர் நிறுவனங்கள் வந்துவிட்டன. பல வினோதமான யோசனைகளுடன் இந்த நிறுவனங்களைத் தொடங்குகின்றனர். அந்த வகையில் பெங்களூருவில் தொடங்கப்பட்டிருக்கும் ஒரு புதிய நிறுவனத்தின் சமீபத்திய பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்தப் பதிவில் டாப்மேட் நிறுவனத்திற்கு ஒரு தலைமை டேட்டிங் அதிகாரி (chief dating officer) தேவை எனக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளனர். இதற்கு சில தகுதிகளையும் முன்வைக்கின்றனர்.
குறைந்தது 1 பிரேக்அப் கட்டாயம், 2 சிச்சுவேஷன்ஸிப் மற்றும் 3 டேட்டிங்களை அனுபவித்திருக்க வேண்டும் (அதனை நிரூபிக்கத் தேவையில்லை, ஆனால் கதை சொல்லவேண்டும்)
புதிய டேட்டிங் விதிமுறைகள் அனைத்தையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என்று நிபந்தனைகள் கூறியுள்ளனர்.
இந்தப் பதிவு வைரலானதைத் தொடர்ந்து, சமூக வலைதள யூசர்கள் பலரும் தங்களது வினோதமான கருத்துகளை தெரிவித்த வண்ணமாக இருக்கின்றனர்.