வருண் சக்கரவர்த்திக்கு எதிராக இங்கிலாந்து சிறப்பாக செயல்படும்: கெவின் பீட்டர்சன்
நீ நான் காதல் : "அவருக்கும் இந்த முடிவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது!" - வதந்தி குறித்து தனுஷிக்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் `நீ நான் காதல்'.
இந்தத் தொடரில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தவர் விஜே தனுஷிக். அவர் திடீரென அந்தத் தொடரில் இருந்து விலகுவதை அவருடைய ரசிகர்களுக்கு அறிவித்திருந்தார். சமீபத்தில் இவருக்கும் மணி என்பவருக்கும் திருமணம் உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவருடைய விலகலுக்குக் காரணம் இதுதான் என பல்வேறு கருத்துகள் பகிரப்பட்ட நிலையில் உண்மைக்காரணம் குறித்து அவரிடமே கேட்டோம்.
" டிசம்பர் 27கிட்ட டெங்கு காய்ச்சல் காரணமா ஶ்ரீலங்காவில் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்தேன். கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு மேல மருத்துவமனையிலேயே இருக்க வேண்டிய சூழல். சீரியல் புரொடக்ஷன் டீம், சேனல் எல்லாரும் எனக்காக வெயிட் பண்ணினாங்க. சீரியல் டிராக்கையும் அஞ்சலி மருத்துவமனையில் இருக்கிற மாதிரி கொண்டு போனாங்க. ஆனா, அதுக்கப்புறமும் சில பர்சனல் காரணங்களால் என்னால வர முடியல.
உடம்பும் முழுசா குணமாகல. அவங்க வெயிட் பண்ண ரெடி ஆனா நான் அவங்களை வெயிட் பண்ண வைக்கிறது சரியா இல்லை. அதனால நானே தொடரில் இருந்து விலகிக்கிறேன்னு சொன்னேன். என்னோட கோரிக்கையை சேனலும் சரி, புரொடக்ஷனும் சரி அக்செப்ட் பண்ணிக்கிட்டாங்க. எனக்கு கொஞ்சம் டைம் தேவைப்பட்டது.
நான் சீரியலில் இருந்து விலகப் போறேன்னு வீடியோ போட்டதுல இருந்து என்னுடைய மேரேஜ் பற்றியும், என் வருங்கால கணவர் பற்றியும் நிறைய நெகட்டிவ் கமென்ட்ஸ் வந்துட்டு இருக்கு. என் கல்யாணத்துக்கும் அவருக்கும் இந்த முடிவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இது முழுக்க முழுக்க என்னுடைய தனிப்பட்ட முடிவு. இப்ப நான் ஶ்ரீலங்காவில் தான் இருக்கேன். என் பர்சனல் கமிட்மெண்ட்ஸ், ஹெல்த் ரெண்டும் சீக்கிரமே சரியாகி நான் மறுபடி சென்னை வந்துடுவேன். வந்ததும் கண்டிப்பா புது புராஜக்ட்ல மறுபடி வருவேன்!" என்றார்.