தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திலிருந்து 1.55 கோடி பேர் நீக்கம்!
பும்ராவின் கொடுங்கனவு, 10 வீரர்களுடன் வென்ற ஆஸி..! கலகலப்பாக பேசிய மார்ஷ்!
ஆலன் பார்டர் விருது விழாவில் பங்கேற்ற ஆஸி. வீரர் மிட்செல் மார்ஷ் பேசியது வைரலாகி வருகிறது.
2025ஆம் ஆண்டுக்கான ஆலன் பார்டர் விருது டிராவிஸ் ஹெட்டுக்கு வழங்கப்பட்டது. ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீரராக டிராவிஸ் ஹெட்டும் டெஸ்ட் போட்டிகளில் ஜோஸ் ஹேசில்வுட்டும் தேர்வானார்கள்.
கடந்தாண்டு (2024) ஆலன் பார்டர் விருதுபெற்ற மிட்செல் மார்ஷ் இந்தியாவுடனான பிஜிடி தொடரில் சுமாராகவே விளையாடினார்.
அவருக்குப் பதிலாக கடைசி டெஸ்ட்டில் பியூ வெப்ஸ்டர் களமிறங்கி சிறப்பாக விளையாடினார். தொடரை ஆஸி. 3-1 என வென்று அசத்தியது.
இந்த நிலையில் விருது விழாவில் பங்கேற்ற மிட்செல் மார்ஷ் கூறியதாவது:
பார்டர் -கவாஸ்கர் தொடரை வென்றது அருமையான விஷயம். நான் இல்லாமல் ஆஸி. வீரர்கள் 10 பேருடன் சிறப்பாக விளையாடினார்கள்.
கடந்த டிசம்பருக்கு முன்பு எனக்கு அதிகமான நேசம் இருந்தது. டிசம்பருக்குப் பிறகு அது வேறு கதையாக மாறியது.
பும்ராவை கோடைக் காலத்தில் எதிர்கொண்டு இலங்கை சென்று ரன்களை குவிப்பதை பார்க்க நன்றாக இருக்கிறது. எனக்கு தேவையான திடல் எதுவென்றால் அது காலே திடல்தான்.
4 வயதாகும் என்னுடைய சகோதரியின் மகன் டெட் உடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தேன். அவனும் ஜஸ்பிரித் பும்ரா பாணியில் ஓடிவந்து பந்து வீசுகிறான். எனக்கு அங்கும் பும்ராவின் கொடுங்கனவு தொடர்ந்தது என்ற கலகலப்பாக பேசினார். இதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் எல்லாம் சிரித்தார்கள்.