ED: ரூ.1000 கோடி சொத்து, ரூ 912 கோடி டெபாசிட் முடக்கம்... தொழிலதிபர் வீட்டில் அம...
பராசக்தி படத்தில் உன்னி முகுந்தன்?
நடிகர் உன்னி முகுந்தன் பராசக்தி திரைப்படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு பராசக்தி எனப் பெயரிட்டுள்ளனர்.
ஹிந்தி மொழித் திணிப்பு எதிரான திரைப்படமாக இது உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. நடிகர்கள் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: நேரடியாக ஓடிடியில் வெளியாகும் மாதவன் - சித்தார்த்தின் டெஸ்ட்!
மேலும், படத்தின் போஸ்டர்கள் வெளியாகி கவனம் பெற்றுள்ள நிலையில், பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்தன் இப்படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில், உன்னி முகுந்தன் நாயகனாக நடித்த மார்கோ திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.