சஞ்சு சாம்சன் இப்படியே தொடர்ந்து ஆட்டமிழந்தால்... அஸ்வின் கூறுவதென்ன?
10 கோடி பார்வைகளைக் கடந்த மினுக்கி... மினுக்கி..!
தங்கலான் படத்தில் இடம்பெற்ற ‘மினுக்கி மினுக்கி’ பாடல் 10 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.
பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படம் கடந்த ஆக.15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் நடிகர் பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடித்திருந்தனர்.
தங்கச் சுரங்கத்தைத் தேடிய ஆங்கிலேயர்களுக்கு உதவச் சென்ற குறிப்பிட்ட சமூகத்தினர் எதிர்கொண்ட பிரச்னைகளை மையமாக்கி இதன் கதை உருவாகியிருந்தது.
இதையும் படிக்க: பராசக்தி படத்தில் உன்னி முகுந்தன்?
சில எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றாலும் உருவாக்கத்தின் அடிப்படையில் தங்கலான் பேசப்பட்டது. தற்போது, நெதர்லாந்தில் ரோட்டர்டம் திரைவிழாவுக்கு தேர்வாகியுள்ளது.
இந்த நிலையில், தங்கலான் படத்தில் இடம்பெற்ற ‘மினுக்கி, மினுக்கி’ பாடல் யூடியூப்பில் 10 கோடி (100 மில்லியன்) பார்வைகளைக் கடந்துள்ளது. ஜி. வி. பிரகாஷ் இசையமைப்பில் உருவான இப்பாடலை உமா தேவி எழுத, சிந்துரி விஷால் பாடியுள்ளார்.