விராட் கோலி, ரோஹித் சர்மா ரோபோக்கள் அல்ல; முன்னாள் இங்கிலாந்து வீரர் ஆதரவு!
தனிப்பட்ட பயணத்திற்கு அரசு வாகனத்தை பயன்படுத்திய அமைச்சர் ராஜிநாமா!
ஆஸ்திரேலியா நாட்டில் அரசினால் தனக்கு வழங்கப்பட்ட காரை தனது சொந்த பயணத்திற்கு பயன்படுத்திய விவகாரத்தில் அந்நாட்டின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் அமைச்சர் ஒருவர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தின் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் ஜோ ஹைலன். கடந்த ஜன.25 அன்று இவர் தனக்கு அரசினால் வழங்கப்பட்ட காரையும் அதன் அரசு ஓட்டுநரையும் பயன்படுத்தி தனது நண்பர்கள் சிலருடன் சிட்னியிலிருந்து அங்குள்ள ஹண்டர் வேல்லி எனும் இடத்திற்கு தனிபட்ட ஒயின் விருந்திற்குச் சென்று திரும்பியுள்ளார்.
இதன் மூலம் 13 மணி நேரத்தில் சுமார் 446 கி.மீ. தூரத்திற்கு அவரது காரின் அரசு ஓட்டுநர் அந்த வாகனத்தை ஓட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: அமெரிக்க கைதிகளை சிறையில் அடைக்க முன்வரும் எல் சால்வடார்!
முன்னதாக, அந்நாட்டின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தின் முதல்வர் கிறிஸ் மின்ஸ் மக்களது வரிப்பணத்தில் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் அரசு காரை அவர்கள் தனிப்பட்ட பயணங்கள் மற்றும் வேலைகளுக்கு பயன்படுத்துவதை தடை செய்யும் சீர் திருத்தங்களை கொண்டு வந்தார்.
இந்நிலையில், தற்போது சொந்த பயணத்திற்காக அரசு வாகனத்தை உபயோகித்தது சர்ச்சையானதைத் தொடர்ந்து அதற்கு பொறுப்பேற்று தனது போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவியை இன்று (பிப்.4) ஜோ ஹைலன் ராஜிநாமா செய்தார்.
இதுகுறித்து அவர் கூறுயிருப்பதாவது: மனிதர்கள் தவறு செய்வது இயல்பு, என் மீது மக்கள் வைத்திருந்த நன்மதிப்பை நான் இழந்துவிட்டேன் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என அவர் கூறினார்.
மேலும், தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், அவர் சம்மர் ஹில் தொகுதியின் அரசு உறுப்பினராக தொடர்ந்து பதவி வகிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.