செய்திகள் :

ராஜபாளையம்: பிசியோதெரபிஸ்ட் எனக்கூறி வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் நகை திருடியவர் கைது!

post image

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கூரை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் ராமசாமி- காசியம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு ஆண், இரண்டு பெண் என நான்கு குழந்தைகள் உள்ளனர். நான்கு பேருக்கும் திருமணமாகி அவரவர் குடும்பத்தினருடன் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதனிடையே சில ஆண்டுகளுக்கு முன்னர் ராமசாமி உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்துவிட்டார். இதனைத்தொடர்ந்து, காசியம்மாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இவரின் தேவைகளை நான்கு பிள்ளைகளும் அவ்வப்போது கவனித்து வந்துள்ளனர்.

கைது

இந்தநிலையில், கடந்த 5-ம் தேதி மதியம், வீட்டில் காசியம்மாள் தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்மநபர் வீட்டுக்குள் புகுந்து தன்னை ஒரு பிசியோதெரபிஸ்ட் என அறிமுகப்படுத்திக் கொண்டார். மூதாட்டி காசியம்மாளிடம் நயமாக பேசிய அந்தநபர், உங்களுக்கு பிசியோ பயிற்சி அளிப்பதற்காக உங்கள்‌ மகன்தான் அனுப்பி வைத்ததாக கூறியுள்ளார்.

இதை நம்பிய காசியம்மாள், அந்த இளைஞர் கூறியதுபோல் தான் அணிந்திருந்த மூன்று செயின், இரண்டு மோதிரம், நான்கு தங்க வளையல், 2 கம்மல் என சுமார் 13 பவுன் தங்கநகையை கழற்றி மேஜை மீது வைத்துள்ளார். அப்போது, காசியம்மாளின் கவனத்தை திசைத்திருப்பிவிட்டு தங்க நகைகளை திருடிக்கொண்டு அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த காசியம்மாள், நகை திருடு போனது குறித்து தனது பிள்ளைகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

வீட்டிற்கு விரைந்து வந்த பிள்ளைகள் நகை திருட்டு குறித்து உடனடியாக காவல்துறையில் அளித்த புகாரின்பேரில். ராஜபாளையம் டி.எஸ்.பி பிரீத்தி தலைமையிலான போலீஸார், தங்கநகை கொள்ளையடித்து சென்ற மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். சம்பவ இடத்தில் சேகரிக்கப்பட்ட கைரேகை மற்றும் சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாக கொண்டு குற்றவாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, சி.சி.டி.வி. காட்சிகளில் நகைகளை கொள்ளையடித்து தப்பியோடிய திருடன் டூவீலரில் அங்கிருந்து தப்பிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதையடுத்து, டூவீலர் பதிவு எண் மற்றும் அங்க அடையாளம் வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் நகை திருட்டில் ஈடுபட்டவர் ராஜபாளையம் மாடசாமி கோவில் தெருவைச் சேர்ந்த ரகுராமன் (வயது 45) என தெரியவந்தது. இதையடுத்து அவரின் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர், ரகுராமை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்‌. இதில், காசியம்மாளிடம் நகை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். மேலும், தான் பிசியோதெரபிஸ்ட் அல்ல, 8-ம்வகுப்பு வரை மட்டுமே படித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து ரகுராமை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 13 பவுன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி: `தனியார் பள்ளி கலவர வழக்கில் மாணவின் தாய் குற்றவாளி’ - குற்றப்பத்திரிகை தாக்கல்

கள்ளக்குறிச்சி, கனியாமூர் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் +2 படித்து வந்த மாணவி, கடந்த 2022 ஜூலை 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அதையடுத்து அது தற்கொலை வழக்காக பதிவுசெய்யப்பட்டது. ஆனால... மேலும் பார்க்க

`எனக்கு லீவு வேணும்..' -தர மறுத்ததால் சக ஊழியர்களைக் கத்தியால் குத்திய அரசு ஊழியர்

மேற்கு வங்கம் மாநிலத்தில், விடுப்பு அளிக்க மறுத்ததால் சக ஊழியர்கள் 4 பேரை அரசு ஊழியர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக, சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோ... மேலும் பார்க்க

'அடுத்து எனக்கு தான் ஸ்கெட்ச்' - வீடியோ காலில் கோவை சிறை கைதி பகீர் வாக்குமூலம்

கோவை மத்திய சிறையில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் இருக்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஏசுதாஸ் என்ற கைதி கடந்த ஜனவரி 27-ம் தேதி சிறை வளாகத்தில் மர்மமான முறைய... மேலும் பார்க்க

மோசடி வழக்கு: ``10-ம் தேதிக்குள் கைது செய்ய வேண்டும்" -நடிகர் சோனு சூட்க்கு எதிராக கைது வாரண்ட்!

பஞ்சாப் மாநிலம் லுதியானாவைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜேஷ் கண்ணா. இவர் லுதியானா நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ``மோஹித் சுலா என்பர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யும்படி... மேலும் பார்க்க

``வயித்துல குழந்தை இருக்கு, விட்டுடு தம்பினு கெஞ்சினேன்’’ - நெஞ்சை உறைய செய்த கர்ப்பிணி வாக்குமூலம்

வேலூர் அருகே வந்துகொண்டிருந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் 36 வயது கர்ப்பிணி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று, அவரை ஓடும் ரயிலில் இருந்தும் கீழே தள்ளிய சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியிருக்கிறத... மேலும் பார்க்க

``தையல் போட்டால் தழும்பு வரும்'' -காயத்தில் Fevi kwik போட்டு ஒட்டிய செவிலியர்... கர்நாடக அதிர்ச்சி!

கர்நாடக மாநிலம் ஹவேரி மாவட்டத்தில் அமைந்துள்ளது ஆரம்ப சுகாதார மையம். இந்த மருத்துவமனைக்கு கடந்த ஜனவரி 14-ம் தேதி கன்னத்தில் ஆழமான காயத்துடன் ரத்தம் சொட்ட சொட்ட குருகிஷன் அன்னப்ப ஹோசாமணி என்ற 7 வயது சி... மேலும் பார்க்க