செய்திகள் :

பெண்கள், குழந்தைகளைப் பாதுகாத்திட சட்டத்தை கடுமையாக்க வேண்டும்: சீமான்

post image

பாலியல் குற்றங்களில் இருந்து பெண்கள், குழந்தைகளைப் பாதுகாத்திட சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் நால்வர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியும், ஆத்திரத்தையும் ஏற்படுத்திய நிலையில், அந்த வேதனை செய்தி மறைவதற்குள் மணப்பாறை மணப்பாரப்பட்டியில் தனியார் பள்ளி சிறுமிக்கு தாளாளர் உள்ளிட்டோர் பாலியல் துன்புறுத்தல் எனும் செய்தி இதயத்தை நொறுங்கச் செய்கிறது.

திமுக ஆட்சியில் பள்ளிக்குழந்தைகள் முதல் பல்கலைக்கழக மாணவி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் கொடுமைகள் வார்த்தைகளால் சொல்லிமாளக்கூடியதல்ல. அண்ணா பல்கலைக்கழகம் தொடங்கி கலைஞர் பேருந்து நிலையம் வரையில் பெண்கள் எங்குமே பாதுகாப்பாகச் செல்ல முடியாத அளவிற்கு தமிழ்நாட்டில் கொடுஞ்சூழல் நிலவுகிறது.

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு என்ற ஒன்றே இல்லாமலாக்கி, பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நிலமாக மாற்றி இருப்பதுதான் திமுக அரசின் நான்கு ஆண்டு காலச் சாதனையா? இதுதான் உலகம் வியக்கும் திராவிட மாடல் ஆட்சியா? பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் ரத்தக்கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கும் வேளையில் காவல்துறையை தனது நேரடிக்கட்டுபாட்டில் வைத்துள்ள தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், பாதிக்கப்படும் பள்ளிக் குழந்தைகள் பற்றி துளியும் கவலையின்றி, திருநெல்வேலியில் அல்வாவை ரசித்து ருசித்து சாப்பிட்டுகொண்டிருக்கிறார் என்பதுதான் வேதனையின் உச்சம்.

ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை: தப்பி ஓட முயன்றவருக்கு எலும்பு முறிவு!

இனியும் இத்தகைய மெத்தனப்போக்கு தொடர்ந்தால் பெண்களும், குழந்தைகளும், பெற்றோரும் அல்லற்பட்டு ஆற்றாது சிந்தும் வேதனைக் கண்ணீரின் வெப்பத்தில் திமுக ஆட்சி அழிவது உறுதி!

ஆகவே, போச்சம்பள்ளி, மணப்பாரப்பட்டி மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பெற்ற மகள்போல போற்றிப் பாதுகாக்க வேண்டிய பிஞ்சு குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிச் சிதைக்கும் கொடூரர்களை சட்டத்தின் முன் நிறுத்தி மிகக்கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற கொடுமைகள் இனியும் தொடராவண்ணம் பெண்கள், குழந்தைகளைப் பாதுகாத்திட சட்டத்தை கடுமையாக்கிவிட வேண்டுமெனவும், தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை: தப்பி ஓட முயன்றவருக்கு எலும்பு முறிவு!

வேலூரில் ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த 4- மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் திருப்பூரில் பனியன் ... மேலும் பார்க்க

மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க நிரந்தரத் தீர்வு வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சமூக வலைதளப் பதிவில், இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து தாக்... மேலும் பார்க்க

பொறியியல் பணி: இரு ரயில்கள் ரத்து

வேலூர் மாவட்டம், காட்பாடி யார்டில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், ஒரு ரயில் பகுதியளவிலும், 2 ரயில்கள் முழுமையாகவும் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திர... மேலும் பார்க்க

திண்டுக்கல் டிஐஜி வந்திதா பாண்டே மத்திய அரசு பணிக்கு மாற்றம்!

திண்டுக்கல் டிஐஜி வந்திதா பாண்டேவை மத்திய அரசு பணிக்கு மாற்றி உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மத்திய இளைஞர் விவகார அமைச்சகத்தின் இயக்குநராக வந்திதா பாண்டேவை நியமித்துள்ளதாகவும், உடனடியாக ம... மேலும் பார்க்க

மணப்பாறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை: ஈபிஎஸ் கண்டனம்

மணப்பாறையில் 4ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், திருச்சி மாவட்டம் மணப... மேலும் பார்க்க

ரயிலில் பாலியல் தொல்லை- மகளிர் ஆணையம் கண்டனம்

ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, ரயிலில் இருந்து கீழ... மேலும் பார்க்க