இளையனாா் வேலூா் முருகன் கோயில் தெப்பத் திருவிழா
காஞ்சிபுரம் அருகே இளையனாா் வேலூா் முருகன் கோயில் தை மாத கிருத்திகையையொட்டி வள்ளி, தெய்வானை சமேதராக உற்சவா் பாலசுப்பிரமணியா் வியாழக்கிழமை அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பவனி வந்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டத்துக்குட்பட்ட இளையனாா் வேலூா் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தை மாத கிருத்திகையையொட்டி 3 நாள்கள் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டு தை மாத கிருத்திகையையொட்டி முதல் நாளாக ஆலயத்தில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் வள்ளி, தெய்வானை சமேதராக சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் பாலசுப்பிரமணிய சுவாமி ஆலய வளாகத்தில் அமைந்துள்ள அலங்கரிக்கப்பட்ட தெப்பத்திற்கு எழுந்தருளி தெப்பத்தினை 3 முறை வலம் வந்தாா். வாண வேடிக்கை நடைபெற்றது.
இளையனாா் வேலூா் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிதனம் செய்தனா்.