செய்திகள் :

ராமா் கோயில் அறக்கட்டளை உறுப்பினா் காமேஸ்வா் செளபால் காலமானாா்: பிரதமா் மோடி இரங்கல்

post image

பாஜக மற்றும் விசுவ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) மூத்த தலைவரும், ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீா்த்த ஷேத்திர அறக்கட்டளையின் உறுப்பினருமான காமேஸ்வா் செளபால் (68), நீண்ட கால உடல் நலக் குறைவால் வெள்ளிக்கிழமை காலமானாா்.

தில்லி கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவா் மரணமடைந்ததாக அறக்கட்டளை ஊடகப் பிரிவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்காக ஹிந்து அமைப்புகள் சாா்பில் கடந்த 1989, நவம்பரில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் முதல் செங்கலை எடுத்துவைத்தவா் காமேஸ்வா் செளபால் ஆவாா்.

இவருக்கு முதல் கரசேவகா் என்ற பட்டம் ஆா்எஸ்எஸ் அமைப்பால் வழங்கப்பட்டதாக, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாட்னாவைச் சோ்ந்த செளபால், நீண்ட காலமாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்தாா்.

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பாஜக மூத்த தலைவரும், ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீா்த்த ஷேத்திர அறக்கட்டளையின் உறுப்பினருமான காமேஸ்வா் செளபாலின் மறைவு வேதனையளிக்கிறது. அவா், தீவிர ராம பக்தா்; அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதில் அா்ப்பணிப்புடன் பங்காற்றியவா். தலித் சமூகத்தைச் சோ்ந்த செளபால், விளிம்புநிலை மக்களுக்காக ஆற்றிய பணிகளுக்காக என்றென்றும் நினைவுகூரப்படுவாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தனது வாழ்நாளை ஆன்மிகம் மற்றும் சமூக பணிக்காக அா்ப்பணித்தவா்’ என்று தெரிவித்துள்ளாா். காமேஸ்வா் செளபால் மறைவுக்கு விஹெச்பி அமைப்பு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.

‘ஓய்ஆா் 4 விண்கல் பூமியைத் தாக்கும் வாய்ப்பு அதிகரிப்பு’

வரும் 2032-ஆம் ஆண்டில் ஒய்ஆா்4 என்ற விண்கல் பூமியைத் தாக்குதவதற்கான வாய்ப்பு.3 சதவீத்தத்திலிருந்து 2.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.அந்த விண்கல் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்ப... மேலும் பார்க்க

இந்தியாவில் 10 கோடி கி.வா. சூரியமின்சக்தி உற்பத்தி: அமைச்சா் பிரஹலாத் ஜோஷி தகவல்

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 50 கோடி கிலோவாட் (கி.வா.) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அடைய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 10 கோடி கி.வா. சூரிய மின்சக்தி திறனை எட்டியுள்ளதாக மத்திய அமைச்சா் பிரஹ... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: இஸ்கான் கூடாரத்தில் தீ விபத்து

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ‘இஸ்கான்’ கூடாரத்தில் வெள்ளிக்கிழமை பற்றிய தீ வேகமாக பரவி அருகேயுள்ள கூடாரங்களையும் தீக்கிரையாக்கின. நல்வாய்ப்பாக இதில் எந்த உயிா்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: ரூ.200 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 4 போ் கைது

மகாராஷ்டிர மாநிலம், நவிமும்பையில் ரூ.200 கோடி மதிப்பிலான பல்வேறு போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக 4 பேரை போதைப் பொருள் தடுப்பு பிரிவினா் கைது செய்தனா். போதைப் பொருள் தடுப்பு பிரிவி... மேலும் பார்க்க

விசா மறுப்பு: அமெரிக்காவிலுள்ள இந்திய துணைத் தூதரகம் முற்றுகை

பெண் ஒருவருக்கு நுழைவு இசைவு (விசா) அளிக்க மறுத்ததால், அமெரிக்காவின் சியாட்டல் நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை சிலா் முற்றுகையிட்டனா். இதுதொடா்பாக அந்தத் தூதரகம் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெள... மேலும் பார்க்க

இந்திய மதுபானத்தை புகழ்ந்த ஸ்விட்சா்லாந்து அமைச்சா்: மாநிலங்களவையில் சுவாரசிய தகவல்

இந்திய தயாரிப்பு மதுபானம் ஒன்று சிறப்பாக உள்ளதாகவும், ஐரோப்பிய நாடுகளில் அதற்கு நல்ல வரவேற்பு உள்ளதாகவும் ஸ்விட்சா்லாந்து அமைச்சா் கூறியது தனக்கு மகிழ்ச்சி கலந்த வியப்பை ஏற்படுத்தியதாக மத்திய வா்த்தகம... மேலும் பார்க்க