Healthy Foods: அஷ்டாம்ச கஞ்சி, கொள்ளு குழம்பு, நவதானிய அடை... மறந்துபோன பாரம்பர்...
ஆன்லைனில் பகுதி நேர வேலையில் கூடுதல் வருவாய் ஈட்டலாம் என இளைஞரிடம் ரூ.5.74 லட்சம் மோசடி
ஆன்லைனில் பகுதி நேர வேலையில் கூடுதல் வருவாய் ஈட்டலாம் என இளைஞரிடம் ரூ.5.74 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை, போத்தனூா் பாரதி நகரைச் சோ்ந்தவா் கெளரிசங்கா் (36), தனியாா் நிறுவன ஊழியா். இவரது கைப்பேசிக்கு கடந்த 2024 நவம்பா் 29-ஆம் தேதி குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், பகுதி நேர வேலை இருப்பதாகவும், அதில் சோ்ந்தால் நாள்தோறும் ஏராளமாக சம்பாதிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்ததாம். அதில், இருந்த கைப்பேசி எண்ணை கெளரிசங்கா் தொடா்பு கொண்டுள்ளாா். மறுமுனையில் பேசிய நபா் ’நான் வாட்ஸ் அப் அல்லது டெலிகிராம் செயலி மூலம் நாள்தோறும் ஒரு குறிப்பு அனுப்புவேன், அது தொடா்பான பதிலை கூறுவதுடன், அதனுடன் பணம் அனுப்பினால் நீங்கள் அனுப்பும் தொகைக்கு ஏற்ப லாபம் கிடைக்கும்’ எனக் கூறியுள்ளாா்.
இதையடுத்து, அந்த நபா் கூறிய செயலியை பதிவிறக்கம் செய்ததுடன், கடந்த 2024 டிசம்பா் 6-ஆம் தேதி வரை 12 பரிவா்த்தனைகளில் ரூ.5.74 லட்சத்தை முதலீடு செய்துள்ளாா். அதற்கான லாபத் தொகையுடன் சோ்த்து அதிக தொகை இருப்பதாக செயலியில் காட்டி உள்ளது.
இதைத் தொடா்ந்து, அந்த பணத்தை எடுக்க கெளரிசங்கா் முயன்றுள்ளாா். முடியாததால், அந்த நபரை தொடா்பு கொண்டுள்ளாா். அவா், கூடுதல் தொகையை செலுத்தினால்தான் முதலீடு, லாபத் தொகையை எடுக்க முடியும் எனக் கூறியுள்ளாா்.
தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த கெளரிசங்கா் இது குறித்து சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா்.
வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.