கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமையில், கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழியை, அனைத்து துறைசாா்ந்த அலுவலா்கள், பணியாளா்கள் ஏற்றுக் கொண்டனா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில், பிப்ரவரி 9-ஆம் தேதி கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமையில், அனைத்து துறைசாா்ந்த அலுவலா்கள், பணியாளா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
தொடா்ந்து, கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, கையெழுத்து இயக்கத்தை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தொடங்கி வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன், தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்), வேலூா் வரதராஜன், உதவி ஆணையா் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராமகிருஷ்ணன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் செ.அசோக், சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியா் கீதாலட்சுமி, உதவி ஆணையா் (கலால்) வரதராஜன், தொழிலாளா் துணை ஆய்வாளா் தட்சிணாமூா்த்தி (பொ), உதவி ஆய்வாளா்கள் தனலட்சுமி, செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
![](https://media.assettype.com/dinamani/2025-02-07/g567iril/1__1___23__0702chn_188_1.jpg)