2 இளைஞர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை - அரக்கோணம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகிலுள்ள ஒருக் கிராமத்தில் கடந்த 30-12-2021 அன்று இரு இளைஞர்கள் சிறுமி ஒருவரைத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டனர்.
இந்த கொடூரம் தொடர்பாக, அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீஸார் `போக்சோ’ மற்றும் `வன்கொடுமை தடுப்பு’ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து, அரக்கோணம் தாலுகா பகுதிக்குஉட்பட்ட பெருங்களத்தூர் கிராமம் இந்திரா நகரைச் சேர்ந்த ஜான் என்கிற ஜானகிராமன் (26) மற்றும் பெருங்களத்தூர் கிராமம் திரௌபதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மூர்த்தி (25) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இந்த இருவரும் நீதிமன்றக் காவலில் தொடர்ந்து சிறையிலடைக்கப்பட்டிருந்தனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-07/wboufl7o/WhatsApp_Image_2025_02_07_at_11_13_53_PM.jpeg)
இந்த வழக்கு விசாரணை ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் துரிதமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், நேற்று (பிப்ரவரி-7) பாலியல் குற்றவாளிகள் இருவருக்கும் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிபதி செல்வம் தீர்ப்பு வழங்கினார். மேலும், குற்றவாளிகளுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார் நீதிபதி. இதையடுத்து, குற்றவாளிகள் இருவரும் சிறையிலடைக்கப்பட்டனர்.