Marvel - DC: `கேப்டன் அமெரிக்கா', `சூப்பர் மேன்'... இந்தாண்டு வெளிவரவிருக்கு மார...
தில்லி வாக்கு எண்ணிக்கை நிலவரம்: பாஜக 36, ஆம் ஆத்மி கட்சி 16-ல் முன்னிலை
புதுதில்லி: தில்லி சட்டப்பேரவைக்கானத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பாஜக 36 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 16 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
தில்லி சட்டப்பேரவைக்கு மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 36 தொகுதிகளில் வெற்றிபெற்றால் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலையில், பாஜக 36 இடங்களிலும், ஆம் ஆத்மி 16 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
தபால் வாக்குகள் எண்ணிக்கை முதலே பாஜக முன்னிலை வகித்து வருகிறது. அதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மி இருந்து வருகிறது. காங்கிரஸ் கண்ணுக்கு எட்டியத்தூரம் காணாமல் இருந்து வருகிறது.
தேர்தல் ஆணைய தகவல்படி, தில்லியில் ஆட்சியமைக்கத் தேவையான இடங்களில் பாஜக முன்னிலையில் இருந்து வருவதன் மூலம், பாஜகவுக்கே வெற்றி வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பாஜக எம்.பி. அனுராக் சிங் தாக்குர்!
பாஜக முன்னிலை தொகுதிகள்
தில்லியில் உள்ள 70 தொகுதிகளில் நரேலா, ரிதாலா, பவானா, கிராரி, ஷாலிமார் பாக், திரி நகர், பல்லிமாரன், மடிபூர், ராஜோரி கார்டன், ஹரி நகர், துவாரகா, மதியாலா, நஜாஃப்கர், பாலம், தில்லி கான்ட், கஸ்தூர்பா நகர், ஆர்கே புரம், சத்தர்பூர், சங்கம் விஹார், விஸ்வாஸ் நகர், ஷாஹ்தாரா, கோண்டா, முஸ்தபாபாத் மற்றும் கரவால் நகர் ஆகிய இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
ஆம் ஆத்மி முன்னிலை தொகுதிகள்
சாந்தினி சௌக், ராஜிந்தர் நகர், கிரேட்டர் கைலாஷ், திரிலோக்புரி, சீமாபுரி மற்றும் பாபர்பூர் உள்ளிட்ட 16 இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலை முன்னிலை வகித்து வருகிறது.
தில்லியுடன் சேர்த்து, உத்தரப்பிரதேசத்தின் மில்கிபூர் தொகுதி மற்றும் தமிழ்நாட்டின் ஈரோடு தொகுதி இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடந்து வருகிறது.
தேசிய தலைநகர் தில்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாஜக ஆட்சியமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.