இந்திய ரசிகர்களுக்காக... முதல்முறையாக சிதார் வாசித்த எட் ஷீரன்!
பாதுகாப்புப் படையினர் மற்றும் நக்சல்களுக்கு இடையே துப்பாக்கிச் சூடு!
ஒடிசாவின் பாலங்கீர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் இடது சாரி நக்சல்களுக்கும் இடையில் பயங்கர துப்பாக்கிச் சூடு தாக்குதல்கள் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலங்கீரின் கங்காமர்தன் குன்றுகளிலுள்ள வனப்பகுதியில் சுமார் 30 நக்சல்கள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று (பிப்.7) அங்கு சோதனை நடத்தப்பட்டது.
அப்போது, ஆயுதப்படை காவலர்கள் தங்களது முகாமை நெருங்குவதை அறிந்த நக்சல்கள் அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதற்கு பாதுகாப்புப் படையினர் நேருக்கு நேர் பதில் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: பூனையின் உரிமையாளரைக் கண்டுபிடிக்க தடயவியல் சோதனை!
இதனைத் தொடர்ந்து, இருதரப்புக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருவதாகவும் அதிகப்படியான பாதுகாப்புப் படை வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளதாகவும் பாலங்கீர் காவல் துறை உயர் அதிகாரி ரிஷிகேஷ் கிலாரி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, வடக்கு மலைத் தொடர் காவல் அதிகாரி ஹிமான்ஷு லால், கங்காமார்தன் மலைகளிலிருந்து நக்சல்கள் வெளியேற்றப்படும் வரை இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் எனக் கூறியுள்ளார்.