காலநிலை மாற்றம்; நகர வளர்ச்சி... எலிகளுக்கு கொண்டாட்டம்!
மழை, வெள்ளம், பனி உருகுதல் எல்லாம் காலநிலை மாற்றத்தோட விளைவுகள்னு தெரியும். இப்போ அதுல எலிகளின் பெருக்கமும் சேர்ந்துடுச்சு. உலகம் சூடாகுறதால நகரங்களில் எலிகளின் எண்ணிக்கையும் அதிகமாகிட்டு வருதாம். நகர வளர்ச்சி, மக்கள் கூட்டம், உணவகங்கள் அதிகரிக்கிறதால, எலிகளுக்கும் வாழ ஏதுவா இருக்குன்னு விஞ்ஞானிகள் சொல்றாங்க.
வாஷிங்டன்ல எலிகள் பிரச்னை அதிகம். சான்ஃப்ரான்சிஸ்கோ, டொரான்ட்டோ, சிகாகோ, பாஸ்டன் மாதிரி சில நகரங்கள்லேயும் எலிகள் அதிகமாகிட்டே வருதாம். நியூ ஆர்லீன்ஸ், டோக்கியோ மாதிரி நகரங்கள்ல எலிகளை கன்ட்ரோல்ல வைக்கிறதுல கவனமா இருக்காங்களாம்.
எலிகள் நகரங்கள்ல அதிகமானா, உணவுப் பொருள்கள் சேதமாகும். மின்கம்பிகளை கடிச்சு சேதப்படுத்தும். வீட்டுச் சுவர்கள்லகூட துளை போட்டுடும். எலிகளால நோய்கள் பரவும். முக்கியமா எலிகள் இருந்தா, பூனைகளும் பாம்புகளும் அதிகமாகும்.
எலிகள் வளர்றதுக்கு காரணம் வெப்பம் மட்டும் இல்ல, நகர வளர்ச்சி, உணவகங்கள், குப்பை இதெல்லாம் மேலோட்டமான காரணங்கள். சுற்றுப்புறம் சுத்தமில்லாம இருந்தா, உணவுப்பொருள் குப்பைகளை முறையா அப்புறப்படுத்தப்படாம இருந்தா, எலிகள் பெருக்கம் அதிகரிக்கத்தான் செய்யும். குப்பைகள் ஒழுங்கா அகற்றப்படாத நகரங்கள்ல எலிகள் பர்மனென்ட்டா தங்கிடும்.
இருட்டு இடங்களும் உணவுக்குப்பைகள் கொட்டப்படுற இடங்களும்தான் எலிகள் ஒளிஞ்சு வாழுற இடங்கள். இந்த மாதிரியான இடங்களை சுத்தமாக்கினா, எலிகள் தானா குறையும். குறிப்பா, வெயில்ல எலிகள் தண்ணீர் தேடி வரும். நாம, குடிநீர்த்தொட்டிகளை மூடி வெச்சா, தண்ணீர் கிடைக்காம அழிஞ்சு போயிடும். அப்புறமென்ன, நம்ம நகரம் நம்ம கையில் தான்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs