முத்தரப்பு தொடர்: சதம் விளாசிய கிளன் பிலிப்ஸ்; பாகிஸ்தானுக்கு 331 ரன்கள் இலக்கு!
``நான் ஏன் குற்றவாளியைப் போல நடத்தப்பட வேண்டும்!'' - எதிர்மறையான விமர்சனங்களுக்கு நாக சைதன்யா பதிலடி
நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவாகி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது `தண்டேல்'.
நாக சைதன்யா - சமந்தா தம்பதி தங்களின் திருமண வாழ்விலிருந்து விலகிக் கொள்வதாக கடந்த 2021-ம் ஆண்டு அறிவித்தனர். இச்செய்தி இருவரின் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இப்போது வரை இவர்களின் விவாகரத்து தொடர்பாக பல எதிர்மறையான கருத்துகள் தொடர்ந்து பரபப்பட்டு வருகின்றன. இந்த எதிர்மறையான கருத்துகள் பற்றி `தண்டேல்' திரைப்படத்திற்கான பேட்டியில் வெளிப்படையாக பேசியிருக்கிறார் நாக சைதன்யா.
அந்த நேர்காணலில் பேசியிருக்கும் நாக சைதன்யா, ``நாங்கள் எங்கள் வழியில் செல்ல விரும்பினோம். இருவரும் சொந்த காரணங்களுக்காக அந்த முடிவை எடுத்தோம். நாங்கள் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்துகிறோம். மேலும் , எங்கள் வாழ்க்கையிலும் முன்னேறி வருகிறோம். இதற்கு மேலும் இந்த விஷயத்தில் என்ன விளக்கம் தேவைபடுகிறதென எனக்கு புரியவில்லை. விவாகரத்து என்பது என் வாழ்க்கையில் மட்டும் நடக்கும் விஷயமல்ல. நான் ஏன் ஒரு குற்றவாளியைப் போல நடத்தப்பட வேண்டும்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2022-07/e4ee101d-272e-41db-8dc2-db299b772c37/1007681_naga_chaitanya_samantha.webp)
நானும் ஓர் உடைந்த குடும்பத்திலிருந்து வந்த குழந்தைதான். ஒரு உறவை முறித்துக் கொள்வதற்கு முன் நான் 1,000 முறை சிந்திப்பேன். அதன் பின்விளைவுகள் எனக்கு நன்றாக தெரியும். நானும் அவரும் இப்போது வாழ்க்கையில் முன்னேறியிருக்கிறோம். நாங்கள் எங்களுடைய சொந்த வாழ்க்கையை வாழ்கிறோம். நான் மீண்டும் காதல் கொண்டு திருமணம் செய்திருக்கிறேன். இந்த விஷயத்தில் எதிர்மறையான விஷயங்களை பரப்பாமல் அவரவர் வாழ்க்கையில் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும். நேர்மறையான சிந்தனைகளை மட்டும் பரப்புங்கள்." எனக் கூறியிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-11-18/opvozhqx/WhatsApp-Image-2024-11-18-at-16.55.14-2.jpeg)