செய்திகள் :

`இதுக்காக டுக்காட்டி காரை வித்துட்டேன்' - ஊழியர்களுக்கு 14.5 கோடி போனஸ் வழங்கிய கோவை ஸ்டார்ட் அப்!

post image
கோவையை தலைமையிடமாகக் கொண்ட கோவை.கோ என்ற ஏ.ஐ ஸ்டார்ட் அப் ஒன்று தங்களின் நிறுவன ஊழியர்களுக்கு 14.5 கோடி போனஸ் வழங்கியிருக்கிறது.

இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தை 2011-ம் ஆண்டு கோவையைச் சேர்ந்த சரவணக்குமார் என்பவர் தொடங்கியிருக்கிறார். இந்த நிறுவனத்தில் மொத்தமாக 140 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

`Together we grow' என்ற திட்டத்தின்படி 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு முன்பு நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த அனைத்து ஊழியர்களின் மூன்றாண்டு சேவை முடிந்ததும் அவர்களின் மொத்த ஆண்டு சம்பளத்திலிருந்து 50 சதவீதம் போனஸாக வழங்கப்படும் என அறிவித்திருக்கிறது இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம். அதை தற்போது செய்தும் காட்டியிருக்கிறது.

office

இது குறித்து இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சரவணக்குமார், ``நான் முதலில் ஐ.டி-யில் பணிபுரிந்துக் கொண்டிருந்தேன். ஆனால், அந்த நேரத்தில் மார்க்கெட்டில் ஒரு இடைவெளியைக் கண்டேன். அதன் பிறகு இந்த ஸ்டார்ட் அப்பை தொடங்க முடிவு செய்தேன். இந்த நிறுவனம் முழுவதும் வெளி நிதியுதவி எதுவுமில்லாமல் இயங்கி வருகிறது. நான் எனது பணியாளர்களுக்கு ஒரு உறுதியான விஷயத்தை கூற விரும்பினேன். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மூன்று ஆண்டுகள் இந்த நிறுவனத்தில் இருங்கள். நான் உங்களுக்கு ஜனவரி 2025-ல் ஆறு மாத சம்பளத்தை போனஸாக வழங்குவேன் எனக் கூறியிருந்தேன். அதுதான் தற்போது நடந்திருக்கிறது. பணியாளர்களுக்கு போனஸ் கொடுப்பதற்காக என்னுடைய புக்காட்டி காரை விற்பனை செய்துவிட்டேன்!'' எனக் கூறியிருக்கிறார்.

சத்யா நிறுவனம்: Samsung Galaxy S 25 Ultra மாடல்; தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் விற்பனை

சத்யா நிறுவனம் அறிமுகம் செய்தது samsung Galaxy S 25 Ultra மாடல் மொபைல் போன் தமிழ்நாடு முழுவதும் 300 கடைகளில் இன்று( பிப்ரவரி 6) முதல் மொபைல் விற்பனைக்கு வந்துள்ளது.Samsung Galaxy S 25 Ultra மாடல் மொபை... மேலும் பார்க்க

Tata: ரத்தன் டாடா போல உடை; 'என் அப்பா வேலை பார்த்த இடத்தில் இன்று நான்...' - சாந்தனு உருக்கம்!

இந்தியாவின் முக்கிய நிறுவனமான `டாடா'-வை நிலையாக வழிநடத்திய தொழிலதிபர் ரத்தன் டாடா கடந்த ஆண்டு அக் 9ம் தேதி தனது 86வது வயதில் காலமானார்.தொழில்துறையில் பல சாதனைகளைச் செய்திருந்தாலும் டாடா இந்தியர்களின் ... மேலும் பார்க்க

DRA Astra: மாதவரத்தில் 30க்கும் மேற்பட்ட அதிநவீன வசதிகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு: DRA அறிமுகம்

சென்னைரியல்எஸ்டேட்துறையில்பெருமைமிகுநிறுவனமாகதிகழும்DRAசென்னைநகரமக்களின்வாழ்விடங்களைநவீனமுறையில்மாற்றிஅமைத்துவருகிறது.அந்தவகையில்தற்போதுஇந்நிறுவனம்மாதவரத்தின்பிரதானஇடத்தில்‘DRA Astra’என்னும்புதியஅடுக்... மேலும் பார்க்க

GRT: ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் வழங்குகிறது உங்கள் பழைய தங்க நகைக்கு புது லைஃப்

1964-ல் அதன் எளிமையான தொடக்கத்திலிருந்து, 'ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்' நகைத் துறையில் ஒரு முன்னணி பெயராக வளர்ந்துள்ளது, தற்போது அதன் 60 வது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடுகிறது.தங்கம், வைரம், பிளாட்டினம், வ... மேலும் பார்க்க

G Square: ரியல் எஸ்டேட் துறையுடன் வில்லா,அடுக்குமாடி கட்டுமான துறையில் நுழையும் ஜி ஸ்கோயர் நிறுவனம்

ரியல் எஸ்டேட் துறையில் தமிழ்நாட்டின் முன்னணி நிறுவனமாக திகழும் ஜி ஸ்கொயர் நிறுவனம், வில்லா மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமான துறையில் நுழைவதாக அறிவித்துள்ளது.நகர்புறங்களில் விதிமுறைகளுக்கு ... மேலும் பார்க்க

Zoho : 'AI-ல் கவனம் செலுத்த போகிறேன்...' - சி.இ.ஓ பதவியில் இருந்து விலகும் ஸ்ரீதர் வேம்பு!

இந்தியாவின் குறிப்பிடத்தக்க மென்பொருள் நிறுவனங்களில் ஒன்று ஜோஹோ. இதன் தலைமை செயல் அதிகாரியாக இதுவரை இருந்து வந்தவர் ஸ்ரீதர் வேம்பு. இவர் இந்தியாவின் 39 வது மிகப்பெரிய பணக்காரர் ஆவார். கடந்த 2021 இல் இ... மேலும் பார்க்க