செய்திகள் :

Ram Gopal Varma:``சத்யா படத்தின் வெற்றி என்னைக் கண்மூடித்தனமாக்கியது''- ராம் கோபால் வர்மா

post image
இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் மாஸ்டர் பீஸ் திரைப்படமான `சத்யா' திரைப்படம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகியிருக்கிறது.

இந்தத் திரைப்படத்தை மீண்டும் பார்த்த பிறகு ராம் கோபால் வர்மா தனது எக்ஸ் தளத்தில் நீளமான பதிவு ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார். அந்தப் பதிவில் படத்தைப் பார்த்து அவர் கண்ணீர் விட்டு அழுதது குறித்துக் கூறியிருக்கிறார். கண்ணீர் படத்திற்காக மட்டுமல்ல, அதற்குப்பின் நடந்த விஷயங்களுக்கும் சேர்த்துதான் என்றும் கூறியுள்ளார்.

``ஒரு திரைப்படத்தை உருவாக்குவது என்பது எப்படிப்பட்ட குழந்தையை பெற்றெடுக்கிறேன் என்பதில் இல்லை. அது உணர்ச்சியிலிருந்து உருவான குழந்தையை பெற்றெடுப்பது போன்றது. சத்யா திரையிடல் முடிந்து ஹோட்டலுக்கு மீண்டும் வந்து என்னை சுயபரிசோதனை செய்து பார்த்தேன். அதில் நான் படத்தில் வரும் சோகத்திற்காக அழவில்லை. அப்போது என்னை நினைத்து மகிழ்ச்சியில் அழுதேன்." என்றவர், ``சத்யா திரைப்படத்தால் என்னை நம்பிய அனைவருக்கும் நான் செய்த துரோகத்தை எண்ணி குற்ற உணர்ச்சியில் அழுதேன்.

ராம் கோபால் வர்மா

பல வாய்ப்புகளைத் தவறவிட்டதற்காகவும் அழுதேன். சத்யா மற்றும் ரங்கீலாவின் வெற்றி என்னை ஒரு விதத்தில் கண்மூடித்தனமாக்கியது. நான் குடிபோதையில் இருந்தேன். அது எனது சொந்த வெற்றி மற்றும் ஆணவத்தால் இரண்டு நாட்களுக்கு முன்பு வரை எனக்குத் தெரியாது. சத்யாவின் பிரகாசமான விளக்குகள் என்னைக் குருடாக்கியபோது நான் என் பார்வையை இழந்தேன்." என்று கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ``பின் வந்த எனது சில படங்கள் வெற்றி பெற்றிருக்கலாம், ஆனால் சத்யாவில் இருக்கும் அதே நேர்மை வேறு எதிலும் இருப்பதாக நான் நம்பவில்லை. சினிமாவில் ஏதாவது ஒரு பாதையை உருவாக்கத் தூண்டிய எனது தனித்துவமான பார்வை, என்னைக் குருடாக்கியது. நான் ஏற்கெனவே செய்ததை இப்போது என்னால் சரி செய்ய முடியாது.

ராம் கோபால் வர்மா

இனிமேல் நான் எடுக்கும் ஒவ்வொரு படமும் நான் இயக்குநராக முதல் இடத்தில் இருக்க வேண்டும் என்ற பயபக்தியுடன் உருவாக்கப்படும். சத்யா போன்ற ஒரு திரைப்படத்தை மீண்டும் என்னால் உருவாக்க முடியாமல் போகலாம். ஆனால் அதை செய்ய விருப்பம் இல்லாமல் இருப்பது சினிமாவிற்கு எதிராக நான் செய்யும் மன்னிக்க முடியாத குற்றம்." எனப் பதிவிட்டிருக்கிறார்.

VIKATAN PLAY:

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MaperumSabaithanil

DaakuMaharaaj Review: `நூடுல்ஸுக்கு தான் 2 மினிட்ஸ், எனக்கு 2 செகண்ட்ஸ்' - பாலைய்யா வென்றாரா?

'அகண்டா', 'வீர சிம்ஹா ரெட்டி', 'பகவந்த் கேசரி' என ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து, பாலகிருஷ்ணா ஆடியிருக்கும் தாண்டவமே இந்த 'டாக்கு மஹாராஜ்'. பாபி கொல்லி இயக்கத்தில் தமன் இசையில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெ... மேலும் பார்க்க

Game Changer Review: 'அக்கறை' அரசியல், பார்முலா காதல் காட்சிகள், பிரமாண்டங்கள் - இவை மட்டும் போதுமா?

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் கலெக்டராக பொறுப்பேற்கிறார் ராம் நந்தன் (ராம் சரண்). தனது மாவட்டத்திலிருந்து குற்றவாளிகளை அகற்றும் பணியில், ஆளும் கட்சியின் முதலமைச்சரின் மகனும், அமைச்சருமா... மேலும் பார்க்க

Game Changer விழா: விபத்தில் உயிரிழந்த ரசிகர்களின் குடும்பங்களுக்கு ராம் சரண் ரூ.10 லட்சம் நிதியுதவி

ஆந்திர பிரதேசம் மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ராஜமஹேந்திரவரம் நகரில் ராம் சரணின் கேம் சேஞ்ஜர் படத்துக்கான புரமோஷன் விழா நடைபெற்றது. ஆந்திர மாநிலத்தின் துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பங்கேற... மேலும் பார்க்க

Game Changer: படத்தில் இருக்கும் ஐந்து பாடல்களின் பட்ஜெட் 75 கோடி! - `ஷாக்'கான ராம் சரண்!

ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கிற `கேம் சேஞ்சர்' திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது.ராம் சரண், எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள இத்திரைப்படம் தயாரிப்பாளர் தில் ராஜுவின் 50-வது படம். பிரமாண்டமாக ... மேலும் பார்க்க

Game Changer: `` இந்திய அரசியலின் உண்மையான கேம் சேஞ்சர் பவன் கல்யாண்தான்!'' - ராம் சரண் ஷேரிங்ஸ்

ஷங்கரின் `கேம் சேஞ்சர்' திரைப்படத்தின் பிரமாண்டமான ப்ரோமோஷன் நிகழ்வு ராஜமுந்திரியில் நடைபெற்றது.இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக பவன் கல்யாண் கலந்துக் கொண்டார். துணை முதல்வராக பதவியேற்றப் பிறகு அ... மேலும் பார்க்க

Game Changer: "இது சங்கராந்தி அல்ல; ராம் சரணின் 'ராம் நவமி'" - இயக்குநர் ஷங்கர் புகழாரம்

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்' வரும் ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.நேற்று (ஜன.2) இப்படத்தின் ட்ரெய்லர் வெள... மேலும் பார்க்க