காஸா: இடம்பெயர்ந்த லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பு!
காஸாவில் 15 மாத காலமாக நீடித்துவந்த சண்டை முடிவுக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் மீண்டும் தங்கள் சொந்த ஊர்களுக்கு உற்சாகத்துடன் திரும்பி வருகின்றனர்.
காஸாவில் ஞாயிற்றுக்கிழமை(ஜன. 19) பகல் 2 மணியளவில் போர் நிறுத்தம் அமலானது. அதனைத்தொடர்ந்து இஸ்ரேல் படைகள் தங்கள் நாட்டு திரும்பி வருகின்றனர். தற்போது அப்பகுதியில் அமைதி திரும்பியுள்ளதைத் தொடர்ந்து, கடந்த ஓராண்டுக்கும் மேலாக மிகுந்த இன்னல்களுக்குள்ளான லட்சக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி வருவதைக் காண முடிகிறது.