செய்திகள் :

இந்திய மாணவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை!

post image

இந்தியாவைச் சேர்ந்த மாணவர் அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி நகரில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஹைதராபாத் நகரின் ஆர்கே புரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி தேஜா (26). இவர் தனது மேல் படிப்புக்காக கடந்த 2022 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்குச் சென்றார். தனது படிப்பை முடித்தவுடன் அங்கேயே வேலை தேடிக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி நகரிலுள்ள எரிவாயு நிலையத்தில் வைத்து மாணவர் ரவி தேஜா மர்ம நபர்களால் இன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

இது அவரின் குடும்பத்தினரிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவரின் தந்தை சந்திரமௌலி, ”என்னால் பேச முடியவில்லை. எந்தத் தந்தையாலும் இதனைத் தாங்க முடியாது. யாருக்கும் இதுபோன்ற நிலைமை ஏற்படக் கூடாது” என வேதனையுடன் கூறினார்.

இதையும் படிக்க | கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: சஞ்சய் ராய்க்கு சாகும்வரை சிறை!

இந்தக் கொலை சம்பவம் குறித்து பதிலளித்த சிகாகோவில் உள்ள இந்தியத் தூதரகம், “இந்திய மாணவர் சாய் தேஜாவின் கொலை அதிர்ச்சியையும் ஆழ்ந்த வருத்தத்தையும் ஏற்படுத்தியது. குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியத் தூதரகமும், வெளியுறவு அமைச்சகமும் வழங்கும்" என்று தெரிவித்தனர்.

ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய செல்லப் பிராணிகள் விற்பனை அமோகம்!

பீஜிங் : செல்லப் பிராணிகளின் குணாதிசயங்களை வெளிப்படுத்தும் விதத்தில் செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தொழில்நுட்பம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள ரோபோட்களை வாங்கும் ஆர்வம் அண்டை நாடான சீனாவில் இளைஞர்களிடையே அதிகரித்... மேலும் பார்க்க

நாளை சூரியன் மறைவதற்குள் எல்லை ஊடுருவல் நிறுத்தப்படும்! டிரம்ப் சூளுரை

நாளை சூரியன் மறைவதற்குள் அமெரிக்க எல்லையில் ஊடுருவல் என்பது முற்றிலும் நிறுத்தப்படும் என்று அதிபராக பொறுப்பேற்கவுள்ள டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு ட... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே பிணைக் கைதிகள் விடுவிப்பு!

இஸ்ரேல், ஹமாஸ் படைகள் பிடித்துவைத்திருந்த பிணைக் கைதிகள் திங்கள்கிழமை விடுவிக்கப்பட்டனர்.காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகள், கடந்தாண்டு அக்டோபரில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதன் பதிலடியாக ... மேலும் பார்க்க

டொனால்ட் டிரம்ப் விருந்து: நீதா அம்பானி அணிந்திருந்த மரகத நெக்லஸ்!

அமெரிக்க அதிபரா பதவியேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப் அளித்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி அணிந்திருந்த மரகத நெக்லஸ் பலரது கவனத்தையும் ஈர்த... மேலும் பார்க்க

அமெரிக்காவில் டிக் டாக் சேவை மீண்டும் தொடக்கம்!

அமெரிக்காவில் டிக் டாக் சேவை தடை செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் சீன நிறுவனமான டிக் டாக் செயலியில் பதிவிடப்படும் தகவல்கள் சீனாவ... மேலும் பார்க்க

டிரம்ப் பதவியேற்பு பிரம்மாண்டம்! ருசிகர தகவல்கள்

அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை (ஜனவரி 20) பதவியேற்க உள்ளார். துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.டி. வான்ஸுடன் தனது இரண்டாவது அலுவல்பூர்வ பதவிக்காலத்தை இன்றைய நாளில் த... மேலும் பார்க்க