Kotak Mahindra Bank பங்கு விலை அதிகரிக்க இதுதான் காரணமா? | IPS Finance | EPI - 1...
ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய செல்லப் பிராணிகள் விற்பனை அமோகம்!
பீஜிங் : செல்லப் பிராணிகளின் குணாதிசயங்களை வெளிப்படுத்தும் விதத்தில் செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தொழில்நுட்பம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள ரோபோட்களை வாங்கும் ஆர்வம் அண்டை நாடான சீனாவில் இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது.
வழக்கமாக வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளைவிட அவற்றைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ள இயந்திர செல்லப் பிராணிகளை தங்களுடன் வைத்துக்கொள்ள இளம் பருவத்தினர் விரும்புகின்றனர்.
செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் விலங்குகளிடம் காணப்படும் குணாதிசயங்களை மேற்கண்ட ரோபோட்கள் வெளிப்படுத்தும் விதத்தில் செயற்கை நுண்ணறிவுத் திறன் மூலம் அவற்றை வடிவமைத்திருப்பது இவற்றின் சிறப்பம்சம்.
இந்த வகை இயந்திரங்கள் கடந்த ஆண்டு மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்டன. அன்றிலிருந்து அவற்றின் மீதான ஈர்ப்பு இளையோர் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கி அவற்றின் விற்பனையும் சூடுபிடித்துள்ளது.
மன அழுத்தத்திலிருந்து விடுபட இவ்வகை இயந்திரங்கள் சிறந்ததொரு தீர்வாக அமைகின்றன என்பதே இவற்றை வாங்கிச் செல்லும் பெரும்பாலான இளைஞர்களின் கருத்தாக உள்ளது.