கொடைக்கானல்: வேரோடு கஞ்சா செடி விற்பனை; போதையில் மாட்டிய கல்லூரி மாணவர்; நடந்தது...
உ.பி.யில் காதலியை மணக்க ஹிந்துவாக மாறிய முஸ்லிம் காதலர்!
உத்தரப் பிரதேசத்தில் காதலியை திருமணம் செய்ய முஸ்லிம் இளைஞர் ஒருவர் ஹிந்து மதத்திற்கு மாறியுள்ளார்.
மதம் மாறி திருமணம் செய்ய காதலர் வீட்டில் சம்மதிக்காத நிலையில், பெண் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
இருவரும் தங்கள் விருப்பப்படி திருமணம் செய்துகொண்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி பகுதிக்குட்பட்ட நாகர் பசார் பகுதியைச் சேர்ந்தவர் சதாம் உசேன். 34 வயதான இவர் அதே பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்துவந்த இவர்களின் காதலுக்கு பெற்றோர் வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
மதம் மாறி திருமணம் செய்ய காதலன் வீட்டில் சம்மதிக்காததால், காவல் நிலையத்தில் காதலி புகாரளித்துள்ளார். திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், கருவைக் கலைக்க வற்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
பஸ்தி காவல் நிலைய அதிகாரி, இது குறித்து இரு வீட்டாரையும் அழைத்துப் பேசி காதலன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் சதாம் உசேன் மதம் மாறி தனது பெயரை சிவசங்கர் சோனி என மாற்றிக்கொண்டு காதலியை திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமணம் அப்பகுதியில் இருந்த கோயிலில் ஹிந்து முறைப்படி நடைபெற்றதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் பெரும் திருப்பமாக திருமணம் செய்துகொண்ட காதல் தம்பதி காவல் துறையிடம் உண்மையைக் கூறியுள்ளது.
அதாவது, மதம் மாறி திருமணம் செய்துகொள்ள காதலன் வீட்டில் ஒப்புக்கொள்ளாததால், இருவரும் பேசிவைத்துக்கொண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக காவல் துறை அதிகாரியிடம் கூறியுள்ளனர்.
இதையும் படிக்க | சாகும்வரை சிறை போதாது! மருத்துவர் பாலியல் கொலை வழக்கில் மமதா அதிருப்தி