வடலூர் வள்ளலார் சர்வதேச மைய கட்டுமானப் பணிகளுக்கு இடைக்காலத் தடை!
வடலூரில் வள்ளலார் சர்வதேச மையத்தின் கட்டுமானப் பணிகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது
வடலூர் வள்ளலார் கோவில் அருகே வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பது தொடர்பான வழக்கில், தற்போதைய நிலை தொடர வேண்டும் என்றும், புதிய கட்டுமானங்கள் அமைக்கப்படக் கூடாது என்றும் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இது தொடர்பாக தமிழக அரசுக்கும் நோட்டீஸ் பிறப்பித்து, வழக்கை பிப்ரவரி 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.