செய்திகள் :

நீதி வேண்டும்; நிதி வேண்டாம்: கொல்கத்தா பெண் மருத்துவரின் தந்தை!

post image

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கு நீதி வேண்டும்; நிதி வேண்டாம் என பாதிக்கப்பட்ட மருத்துவரின் தந்தை தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் குற்றவாளியான சஞ்சய் ராயை சாகும் வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், மருத்துவரின் தந்தை இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் சிபிஐ விசாரணை குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என்று கடந்த வாரம் தீர்ப்பளிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு விதிக்கப்படும் தண்டனை விவரம் இன்று (ஜன. 20) வெளியானது.

இதில், குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சஞ்சய் ராயை சாகும் வரை சிறையில் அடைக்க கொல்கத்தா சியால்டா நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. மேலும் குற்றவாளிக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தது.

வன்கொடுமைக்கு உள்ளாகி, படுகொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் குடும்பத்துக்கு ரூ.17 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று மேற்கு வங்க மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், நீதிமன்ற தீர்ப்பு குறித்து பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் தந்தை தெரிவித்ததாவது,

சிபிஐ அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் நல்ல தீர்ப்பு வழங்குவதாக வாழ்நாள் சிறையை நீதிமன்றம் அறிவித்துள்ளது. சிறப்பு புலனாய்வுப் பிரிவால் நடத்தப்பட்ட விசாரணையில் எங்களுக்கு ஏராளமான கேள்விகள் உள்ளன. நிதிக்காக நாங்கள் நீதிமன்றத்திற்குச் செல்லவில்லை. எங்களுக்கு நீதி வேண்டுமே தவிர நிதி அல்ல. கொல்கத்தா காவல் துறையினர் செய்தது தவறு. இதனைத் தொடர்ந்து சிபிஐயும் சில விசாரணைகளைச் செய்தது. எங்கள் மகள் இறந்ததை விட அதிகமாக வலியை கொல்கத்தா காவல் துறையினரின் விசாரணை எங்களுக்குக் கொடுத்துவிட்டது என உருக்கமாகக் கூறினார்.

இந்த வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை சிறை விதித்த நீதிமன்றத்தின் தீர்ப்பு திருப்திகரமாக இல்லை என முதல்வர் மமதா பானர்ஜியும் தெரிவித்திருந்தார். முன்னாள் தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மாவும் அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | உ.பி.யில் காதலியை மணக்க ஹிந்துவாக மாறிய முஸ்லிம் காதலர்!

வடலூர் வள்ளலார் சர்வதேச மைய கட்டுமானப் பணிகளுக்கு இடைக்காலத் தடை!

வடலூரில் வள்ளலார் சர்வதேச மையத்தின் கட்டுமானப் பணிகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளதுவடலூர் வள்ளலார் கோவில் அருகே வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பது தொடர்பான வழக்கில், தற்போத... மேலும் பார்க்க

பேரவைத் தலைவர்கள் மாநாடு: அப்பாவு வெளிநடப்பு!

பிகாரில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாட்டிலிருந்து தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு வெளிநடப்பு செய்தார். அரசமைப்பு சட்டத்தின் 75ஆவது ஆண்டு விழாவையொட்டி சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாடு பிகார் ... மேலும் பார்க்க

சாகும் வரை சிறை போதாது! நீதிமன்றம் முன்பு மருத்துவர்கள் போராட்டம்!

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு வாழ்நாள் சிறை போதாது எனக் கூறி இளநிலை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பார்க்க

உ.பி.யில் காதலியை மணக்க ஹிந்துவாக மாறிய முஸ்லிம் காதலர்!

உத்தரப் பிரதேசத்தில் காதலியை திருமணம் செய்ய முஸ்லிம் இளைஞர் ஒருவர் ஹிந்து மதத்திற்கு மாறியுள்ளார். மதம் மாறி திருமணம் செய்ய காதலர் வீட்டில் சம்மதிக்காத நிலையில், பெண் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின... மேலும் பார்க்க

'குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கியிருக்க வேண்டும்' - தேசிய மகளிர் ஆணைய முன்னாள் தலைவர்

கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் கொலை வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணைய முன்னாள் தலைவர் ரேகா சர்மா கூறியுள்ளார். கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனைய... மேலும் பார்க்க

சாகும்வரை சிறை போதாது! மருத்துவர் பாலியல் கொலை வழக்கில் மமதா அதிருப்தி

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க