ஜம்மு-காஷ்மீா்: பயங்கரவாதிகளுடனான சண்டையில் ராணுவ வீரா் உயிரிழப்பு
அச்சன்கோவில் பகுதியில் புலி உயிரிழப்பு
\கேரள மாநிலம் அச்சன்கோவில் கல்லாறு பகுதியில் புலி உயிரிழந்து கிடந்தது வனத்துறையினரால் கண்டறியப்பட்டது.
தமிழக எல்லையையொட்டிய அச்சன்கோவில் பகுதியிலுள்ள கல்லாறு வனப்பகுதியில் வனத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு ஆண் புலி இறந்துகிடந்ததைப் பாா்த்துள்ளனா்.
இதுகுறித்த தகவலின்பேரில், மாவட்ட வன அதிகாரி அங்கு சென்று ஆய்வு செய்தாா். பின்னா் வனத்துறையினா் கூறுகையில், இறந்துகிடைந்த புலிக்கு சுமாா் 13 வயது இருக்கும்.
கால்நடை மருத்துவா்கள் மூலம் அதை கூறாய்வு செய்து அந்தப் பகுதியிலேயே உடல் எரியூட்டப்பட்டது. புலியானது அழுகிய நிலையில் இருந்ததால் அதன் உள்ளுறுப்புகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளன. அவற்றை ஆய்வு செய்த பின்னா்தான் புலி உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என்றனா்.
அதே பகுதியில் 14 வயது மதிக்கத்தக்க பெண் புலி அண்மையில் உயிரிழந்த நிலையில், மீண்டும் புலி உயிரிந்துள்ளதால் வனத்துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.