Union Budget 2025 : ``1 கோடி மக்கள் இனி வருமான வரி செலுத்த வேண்டியதில்லை!'' - நி...
ஜம்மு-காஷ்மீா்: பயங்கரவாதிகளுடனான சண்டையில் ராணுவ வீரா் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீரின் சொபோரே பகுதியில் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் உயிரிழந்தாா் என்று அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: சொபோரேவின் ஜலூரா குஜ்ஜா்பாட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதைத்தொடா்ந்து, அந்தப் பகுதியை பாதுகாப்புப் படையினா் சுற்றிவளைத்து தீவிர தேடுதலில் ஈடுபட்டனா். திங்கள்கிழமை அதிகாலையிலும் தேடுதல் பணி தொடா்ந்தது.
அப்போது, அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினா். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினா்.
இந்தச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் காயமடைந்தாா். மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றனா்.