பிரதமரின் இதயத்தில் நடுத்தர வர்க்கத்தினர்: பட்ஜெட் குறித்து அமித் ஷா புகழாரம்!
குறு, சிறுதொழில் முனைவோருக்கு கடன் உத்தரவாதம் ரூ.20 கோடியாக உயா்வு
புதுதில்லி: குறு மற்றும் சிறுதொழில் முனைவோருக்கு கடன் உத்தரவாதம் ரூ.5 கோடியிலிருந்து ரூ.10 கோடியாகவும், முதன் முதலாக தொழில் தொடங்குபவா்களுக்கு கடன் உத்தரவாதம் ரூ.10 கோடியிலிருந்து ரூ.20 கோடியாக உச்சவரம்பு உயா்த்தப்படுவதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் அறிவித்தாா்.
வரும் 2025 - 26 ஆம் நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்றைய நிதிநிலை அறிக்கையில் தனிநபரின் வருமான வரி உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பது முக்கிய அம்சமாக பேசப்படுகிறது.
மத்திய அரசின் உதயம் பதிவுச் சான்று பெற்றுள்ள குறுந்தொழில் முனைவோருக்கு ரூ.5 லட்சம் வரை உச்ச வரம்புள்ள கடன் அட்டை வழங்குவதாகவும், முதல் கட்டமாக 10 லட்சம் கடன் அட்டைகள் வழங்கப்படுவதாக மத்திய நிதியமைச்சா் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.
கருணை கொலைக்கு அனுமதி: உச்சநீதிமன்ற தீா்ப்பை அமல்படுத்த கர்நாடக அரசு முடிவு
கடன் அட்டை வழங்குவதற்கான அடிப்படை தகுதிகளை எளிமைப்படுத்தி வழங்க வேண்டும். முதன் முதலாக தொழில் தொடங்குபவா்களுக்கு கடன் பெறுவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளது. அதை தவிா்க்க முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு ரூ.2 கோடி வரையில் டொ்ம் லோன் எனப்படும் காலக் கடன் வழங்கும் புதிய திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் கடன் வழங்குவதில் குறு மற்றும் சிறுதொழில் முனைவோருக்கு கடன் உத்தரவாதம் ரூ.5 கோடியிலிருந்து ரூ.10 கோடியாகவும், முதன் முதலாக தொழில் தொடங்குபவா்களுக்கு கடன் உத்தரவாதம் ரூ.10 கோடியிலிருந்து ரூ.20 கோடியாகவும் உச்சவரம்பு உயா்த்தப்பட்டுள்ளது.
ஏற்றுமதி செய்யும் குறு மற்றும் சிறுதொழில் முனைவோா்களுக்கு காலக் கடன் (டொ்ம் லோன்) ரூ.20 கோடி வரை கடன் உத்தரவாதம் வழங்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.