செய்திகள் :

மத்திய பட்ஜெட்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூறுவது என்ன?

post image

மத்திய பட்ஜெட் ஓர் அரசியல் நிகழ்வு என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

2025 - 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை(பிப். 1) தாக்கல் செய்து உரையாற்றினார்.

பல்வேறு துறைகளுக்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட அவர், குறிப்பாக தனிநபர் ஆண்டு வருவாய் ரூ. 12 லட்சம் வரை இனி வருமான வரி இல்லை என்று அறிவித்துள்ளார்.

மேலும், பிகார் மாநிலத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து அந்த மாநிலத்திற்கு மட்டும் சிறப்பு அறிவிப்புகள் வெளியாகியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூறியது:

காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்

நடுத்தர வர்க்கத்தினருக்கு வரி குறைப்பு என்பதை நல்ல விஷயமாகவே பார்க்கிறேன். அது உங்களுக்கு சம்பளமாக இருந்தால் நீங்கள் குறைவாக வரி செலுத்தலாம். ஆனால், சம்பளம் இல்லையென்றால் என்ன நடக்கும்? வருமானம் எங்கிருந்து வரப் போகிறது?

வருமான வரி விலக்கில் பயனடைய, உண்மையில் வேலைவாய்ப்புகள் தேவை. வேலையின்மை பற்றி நிதியமைச்சர் குறிப்பிடவில்லை. 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்று விரும்பும் கட்சி ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள தேர்தலைப் பயன்படுத்தி அவர்களுக்கு அதிக இலவசங்களை வழங்குவது முரண்பாடான ஒன்று. தங்கள் கூட்டணியில் உள்ளவர்களின் பாராட்டைப் பெற அவர்கள் இதுபோன்று பல தேர்தல்களை நடத்தலாம்.

இதையும் படிக்க | விவசாயிகளுக்கான அறிவிப்புகள் எங்கே? - ஹர்சிம்ரத் கெளர் பாதல் கேள்வி

சிரோமணி அகாலிதள எம்.பி. ஹர்சிம்ரத் கெளர் பாதல்

சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் மாநிலங்களின் பெயர்கள் மட்டுமே பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக பட்ஜெட்டில் இருந்தது பிகார், பிகார், பிகார்... மட்டுமே.

பஞ்சாப் பற்றி பட்ஜெட்டில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதத்திற்காக விவசாயிகள் கடந்த 4 ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பட்ஜெட்டில் விவசாயிகளுக்காக அவர்கள் என்ன அறிவித்தார்கள்? இது விவசாயிகளுக்கு எதிரான பட்ஜெட். தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் விவசாயிகளின் குரல் கேட்கப்படவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது.

காங்கிரஸ் எம்.பி. கிரண் குமார் சாமலா

மத்திய அமைச்சரின் இன்றைய பட்ஜெட் உரை ஓர் அரசியல் நிகழ்வாகவே இருந்தது. பட்ஜெட்டில் குறிப்பிட்டிருந்த மாநிலங்களில் ​​பிகாருக்கு அதிக முக்கியத்துவம் அளித்திருப்பதைக் கண்டோம்.

அதேநேரத்தில் தெலங்கானா போன்ற மாநிலங்களும் அதிக முக்கியத்துவம் பெற வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதில் ஏதோ அரசியல் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

இதையும் படிக்க | பட்ஜெட்டைவிட கும்பமேளாவில் எத்தனை பேர் இறந்தார்கள் என்று கூறுங்கள்: அகிலேஷ் யாதவ்

காங்கிரஸ் எம்.பி. சரண்ஜித் சிங் சன்னி

பாஜக எல்லாவற்றையும் தங்கள் சொந்த "கிழக்கு இந்திய நிறுவனத்திற்கு" விற்கிறது.

இது திசையில்லாத, நோக்கமில்லாத பட்ஜெட். பட்ஜெட்டில் எந்தத் துறைக்கும் எந்த முக்கிய அறிவிப்பும் இல்லை. பஞ்சாப், ஹரியாணா, இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களின் பெயர்கள்கூட உச்சரிக்கப்படவில்லை.

பாஜகவினர் எல்லாவற்றையும் தங்கள் சொந்த 'கிழக்கு இந்திய நிறுவனத்திற்கு'(வடகிழக்கு மாநிலங்களுக்கு) விற்கிறார்கள்.

திமுக எம்.பி. தயாநிதி மாறன்

மிகவும் ஏமாற்றமளிக்கும் பட்ஜெட். தில்லி தேர்தலையொட்டி தில்லி வாக்காளர்களைக் குறிவைத்து திட்டமிடப்பட்ட பட்ஜெட்போலத் தெரிகிறது.

ரூ. 12 லட்சம் வரை வருமானத்துக்கு வரி இல்லை என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார். பின்னர், 8 - 12 லட்சம் வரை 10 சதவிகிதம் வரி வரம்பு எனத் தெரிவித்துள்ளார். இது, மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எளிமையாக நேரடியாக அறிவிப்பை வெளியிடவில்லை.

நடுத்தர வர்க்கத்தினர் மீண்டும் நிதியமைச்சரால் ஏமாற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தாண்டு பிகார் தேர்தல் நடைபெறவுள்ளதால், அம்மாநிலத்துக்கு மட்டும் உள்கட்டமைப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அல்லது வேறெந்த தென் மாநிலங்கள் குறித்தும் ஒரு வார்த்தைகூட உரையில் இல்லை.

இதையும் படிக்க | லித்தியம் பேட்டரி வரி குறைப்பு! செல்போன், மின் வாகனங்கள் விலை குறைகிறது!

வருமான வரி உச்ச வரம்பு அதிகரிப்பு! எவ்வாறு பயனளிக்கும்?

வரும் 2025 - 26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக அதிகரித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.இதனுடன், மாத வர... மேலும் பார்க்க

ரயில்வேயை கண்டுகொள்ளாத மத்திய பட்ஜெட்! பங்குச் சந்தையில் எதிரொலி!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்.1ஆம் தேதி தாக்கல் செய்த மத்திய நிதிநிலை அறிக்கையில், ரயில்வே துறை தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லாததால், பங்குச் சந்தைகளில் ரயில்வே துறை தொடர்பான பங்குகள் கடு... மேலும் பார்க்க

பாஜக முக்கியத் தலைவர்களின் 3 மாதப் பயணச் செலவு ரூ. 168.9 கோடி!

மக்களவைத் தேர்தலின்போது பாஜக செலவினம் குறித்த அறிக்கை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் ஜூன் வரையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவின் செலவினங்கள் குறித்த அறிக்கையை இந்த... மேலும் பார்க்க

சிறந்த 50 சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தப்படும்: நிதியமைச்சர்!

நாட்டின் சிறந்த 50 சுற்றுலாத் தலங்கள் மாநிலங்களுடன் இணைந்து மேம்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். நடப்பாண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன... மேலும் பார்க்க

குறு, சிறுதொழில் முனைவோருக்கு கடன் உத்தரவாதம் ரூ.20 கோடியாக உயா்வு

புதுதில்லி: குறு மற்றும் சிறுதொழில் முனைவோருக்கு கடன் உத்தரவாதம் ரூ.5 கோடியிலிருந்து ரூ.10 கோடியாகவும், முதன் முதலாக தொழில் தொடங்குபவா்களுக்கு கடன் உத்தரவாதம் ரூ.10 கோடியிலிருந்து ரூ.20 கோடியாக உச்சவர... மேலும் பார்க்க

மத்திய அரசு வாங்கவிருக்கும் கடன்! அதிகம் செலவிடும் துறை?

வரும் 2025 - 26ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பொது நிதிநிலை அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய அரசு தரப்பில் வரும் நிதியாண்டுக்காக ரூ.14.82 லட்சம் கோடி கடன் வ... மேலும் பார்க்க