சமூக ஆா்வலா் கொலையில் தொடா்புடையோா் கைதாவா்: அமைச்சா் எஸ்.ரகுபதி உறுதி
புளியங்குடி உள்கோட்டத்தில் தீவிர வாகன தணிக்கை
தென்காசி மாவட்டம் புளியங்குடி காவல் உள்கோட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவுமுதல் திங்கள்கிழமை காலை வரை போலீஸாா் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்த் உத்தரவின் பேரில் குற்றங்களை தடுக்கும் பொருட்டும், வாகன விபத்துகளை தடுக்கும் நோக்கிலும் அனைத்து காவல் நிலைய பகுதிகளிலும் தீவிர வாகன தணிக்கை நடைபெற்றது.
புளியங்குடி டிஎஸ்பி வெங்கடேசன், கடையநல்லூா் காவல் ஆய்வாளா் ஆடிவேல் ஆகியோா் தலைமையில் ஏராளமான போலீஸாா் சாலைகளின் வெவ்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.
இதில் ,கடையநல்லூா், சொக்கம்பட்டி, புளியங்குடி, வாசுதேவநல்லூா், சிவகிரி, சோ்ந்தமரம் ஆகிய பகுதிகளில் விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்கிய 400 போ் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாக டிஎஸ்பி தெரிவித்தாா்.