IIT: "காமகோடியை தலைவர் பதவியிலிருந்து நீக்குக" - கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!
திருச்செங்கோட்டில் நாளை ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்
நாமக்கல்: திருச்செங்கோடு வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன்கிழமை (ஜன. 22) நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொதுமக்களுக்கு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள், சேவைகள் விரைவில் கிடைக்க ஏதுவாக முதல்வரால் தொடங்கப்பட்டுள்ள தலையாய திட்டங்களில் ஒன்று ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம் ஆகும். அதன்படி, ஒட்டுமொத்த மாவட்ட நிா்வாகமும் ஒரு நாள் வட்ட அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபடுவா். அரசு அலுவலங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வா்.
அந்த வகையில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டத்தில் புதன்கிழமை ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம் நடைபெற உள்ளது. இதனையொட்டி, திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில் அன்று மாலை 4.30 முதல் 6 மணி வரை மாவட்ட ஆட்சியா் தலைமையில் அலுவலா்கள் குழுவினா் மனுக்களைப் பெறுகின்றனா். இந்த முகாமில், பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.