செய்திகள் :

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம்: ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

post image

வரும் 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக்குவது என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கனவை நனவாக்க தேசிய மாணவர் படையினர் முக்கியப் பங்களிக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.

தில்லி கன்டோன்மென்ட் பகுதியில் என்சிசி அமைப்பின் குடியரசு தின முகாம் ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது. தில் நாடு முழுவதிலும் இருந்து 2,361 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். வரும் 27-ஆம் தேதி பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியுடன் இந்த முகாம் நிறைவடையும்.

இந்நிலையில், என்சிசி முகாமில் திங்கள்கிழமை பங்கேற்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: என்சிசி முகாமில் மாணவர்கள் காட்டிவரும் ஒற்றுமையும் ஒழுக்கமும் பாராட்டத்தக்கவை. இந்தியர் பலராயினும் ஆன்மா ஒன்றுதான்; பல்வேறு கிளைகள் இருந்தாலும் வேர் ஒன்றுதான்; பல்வேறு ஒளிக் கதிர்கள் இருந்தாலும் வெளிச்சம் ஒன்றுதான்.

நான் அரசியலுக்கு வருவதற்குமுன் மாணவராகவும் என்சிசி உறுப்பினராகவும் இயற்பியல் ஆசிரியராகவும் இருந்தேன்.

என்சிசி மாணவர்கள் காட்டி வரும் ஆர்வமானது இந்தியாவுக்கு பிரகாசமான எதிர்காலம் உண்டு என்பதைக் காட்டுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, என்சிசி அமைப்பின் முன்னாள் உறுப்பினராவார். வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக்க வேண்டும் என்ற கனவை அவர் கொண்டுள்ளார். அவரது கனவை நனவாக்குவதற்கு பங்களிக்க வேண்டிய பொறுப்பு என்சிசி மாணவர்களுக்கு உள்ளது.

வளர்ந்த நாடு என்ற கனவு வெறுமனே நிலத்தின் மீதான வளர்ச்சி அல்ல: அது ஒட்டுமொத்த சமூகமும் வளர்வதைக் குறிப்பதாகும். தனது உறுப்பினர்கள் இளவயதில் இருக்கும்போது அவர்களுக்கு ஒழுக்கத்தையும் தலைமைப் பண்புகளையும் என்சிசி அளிக்கிறது என்றார்.

வருமான வரி உச்ச வரம்பு அதிகரிப்பு! எவ்வாறு பயனளிக்கும்?

வரும் 2025 - 26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக அதிகரித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.இதனுடன், மாத வர... மேலும் பார்க்க

ரயில்வேயை கண்டுகொள்ளாத மத்திய பட்ஜெட்! பங்குச் சந்தையில் எதிரொலி!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்.1ஆம் தேதி தாக்கல் செய்த மத்திய நிதிநிலை அறிக்கையில், ரயில்வே துறை தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லாததால், பங்குச் சந்தைகளில் ரயில்வே துறை தொடர்பான பங்குகள் கடு... மேலும் பார்க்க

பாஜக முக்கியத் தலைவர்களின் 3 மாதப் பயணச் செலவு ரூ. 168.9 கோடி!

மக்களவைத் தேர்தலின்போது பாஜக செலவினம் குறித்த அறிக்கை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் ஜூன் வரையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவின் செலவினங்கள் குறித்த அறிக்கையை இந்த... மேலும் பார்க்க

சிறந்த 50 சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தப்படும்: நிதியமைச்சர்!

நாட்டின் சிறந்த 50 சுற்றுலாத் தலங்கள் மாநிலங்களுடன் இணைந்து மேம்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். நடப்பாண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன... மேலும் பார்க்க

குறு, சிறுதொழில் முனைவோருக்கு கடன் உத்தரவாதம் ரூ.20 கோடியாக உயா்வு

புதுதில்லி: குறு மற்றும் சிறுதொழில் முனைவோருக்கு கடன் உத்தரவாதம் ரூ.5 கோடியிலிருந்து ரூ.10 கோடியாகவும், முதன் முதலாக தொழில் தொடங்குபவா்களுக்கு கடன் உத்தரவாதம் ரூ.10 கோடியிலிருந்து ரூ.20 கோடியாக உச்சவர... மேலும் பார்க்க

மத்திய பட்ஜெட்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூறுவது என்ன?

மத்திய பட்ஜெட் ஓர் அரசியல் நிகழ்வு என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.2025 - 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை(பிப். 1)... மேலும் பார்க்க