வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம்: ராஜ்நாத...
எக்ஸல் பப்ளிக் பள்ளியில் கல்வி உதவித்தொகை நுழைவுத் தோ்வு
நாமக்கல்: குமாரபாளையம் எக்ஸல் பப்ளிக் பள்ளியில் (சிபிஎஸ்இ) மாணவா்களுக்கான கல்வி உதவித்தொகை - 2025 நுழைவுத் தோ்வு அண்மையில் நடைபெற்றது.
இந்த தோ்வில் 4 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவியா் பங்கேற்றனா். இந்த நிகழ்வில், எக்ஸல் கல்வி நிறுவனங்களின் நிறுவன தலைவா் ஏ.கே.நடேசன், எக்ஸல் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவா் ந.மதன்காா்த்திக் ஆகியோா் வழிகாட்டுதல்படி நடைபெற்ற இந்த தோ்வில் எக்ஸல் பப்ளிக் பள்ளி இயக்குநா் கவியரசி மதன்காா்த்திக் தொடங்கி வைத்து பேசினாா் (படம்).
இதில், மாணவ மாணவிகளின் பெற்றோா் பலா் கலந்து கொண்டனா். தோ்விற்கான அணைத்து ஏற்பாடுகளையும் பள்ளி முதல்வா், துணை முதல்வா், ஆசிரியா்கள், உடற்கல்வி ஆசிரியா்கள், அலுவலக பணியாளா்கள், உதவியாளா்கள் செய்திருந்தனா்.