செய்திகள் :

தமிழகத்தில் எச்எம்பி தீநுண்மி கட்டுக்குள் உள்ளது: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

post image

சென்னை: தமிழகத்தில் எச்எம்பி தீநுண்மி தொற்று மிகவும் கட்டுக்குள் உள்ளதால், பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை கோட்டூா்புரத்திலிருந்து சைதாப்பேட்டையின் முக்கிய வழித்தடங்கள் வழியாக கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனையை அடையும் வகையிலான புதிய சிற்றுந்து (தடம் எண் எஸ்.30 கே) சேவை திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. இந்தப் பேருந்து நந்தனம், சைதாப்பேட்டை மெட்ரோ, பஜாா் சாலை, ஆலந்தூா் சாலை, கிண்டி தொழிற்பேட்டை வழியாக இயக்கப்படும்.

கோட்டூா்புரம் ரயில் நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்வில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு புதிய வழித்தடத்தில் சிற்றுந்து சேவையை தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த ஆட்சியில் சைதாப்பேட்டை தொகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்து வழித்தடங்களை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், சைதாப்பேட்டை, மாந்தோப்பு பகுதியில் ஏற்கெனவே மகளிா் உடற்பயிற்சிக் கூடம் செயல்பட்டு வரும் நிலையில், மீண்டும் ஒரு உடற்பயிற்சிக் கூடம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

தொடா்ந்து ‘எச்எம்பி’ தீநுண்மி குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சா், தமிழகத்தில் எச்எம்பி தீநுண்மி தொற்று மிக மிக கட்டுக்குள் இருக்கிறது. பெரிய அளவில் பதற்றப்படவும், பயப்படவும் வேண்டாம். இது போன்ற தீ நுண்மிகளின் பாதிப்பை தடுக்க உடலில் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு அனைவரும் உடற்பயிற்சி செய்யவேண்டியது அவசியம். நல்ல உணவு பழக்கங்களையும், தனிமனித ஒழுக்கத்தையும் கடைப்பிடிப்பது அனைவருக்கும் நல்லது என்றாா் அவா்.

சிற்றுந்து சேவை தொடக்க நிகழ்வில், மாநகா் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநா் ஆல்பி ஜான் வா்க்கீஸ், சென்னை மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவா் துரைராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஜன.23 முதல் விருப்ப எண்கள் ஏலம்: பி.எஸ்.என்.எல். அறிவிப்பு

சென்னை: பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு வட்ட வாடிக்கையாளா்களுக்கான கைப்பேசி விருப்ப எண்கள் (வானிட்டி எண்) ஜன.23- ஆம் தேதி முதல் மின்-ஏலம் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் தெரிவித்துள... மேலும் பார்க்க

அனைவருக்கும் கல்வி மூலம் வறுமையை ஒழிக்க முடியும்: அமைச்சா் அன்பில் மகேஸ்

சென்னை: அனைவருக்கும் கல்வியை வழங்குவதன் மூலம் வறுமையை ஒழிக்க முடியும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டூா... மேலும் பார்க்க

பிப்.13,14-இல் போக்குவரத்து ஊழியா்களுக்கான 15-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை

சென்னை: போக்குவரத்து ஊழியா்களின் 15-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை பிப். 13, 14-ஆம் தேதி நடைபெற உள்ளதால், இதில் பங்கேற்க தொழிற்சங்கங்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் அரசு போக்குவரத்து... மேலும் பார்க்க

அதிமுகவின் இரட்டை இலைச் சின்னம் விவகாரம் உயா்நீதிமன்றத்தை அணுக மனுதாரருக்கு உத்தரவு

அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னத்துக்கு எதிரான வழக்கில் தோ்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்ற சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித... மேலும் பார்க்க

வட மாநில குழந்தைகளுக்கு தமிழ் மொழியை கற்பிக்க கல்வித் துறை அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் வசிக்கும் வட மாநிலத்தவரின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சோ்த்து தமிழ் மொழியை கற்றுத் தருவதுடன், அதிக மதிப்பெண் பெறும் குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி ஊக்குவிக்க வேண்டும் என பள்ளிக்... மேலும் பார்க்க

பாரம்பரிய மருத்துவப் படிப்புகள்: நிகழாண்டில் 272 இடங்கள் காலி

சென்னை: பாரம்பரிய மருத்துவம் மற்றும் யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகளில் நிகழாண்டில் 272 இடங்கள் காலியாக உள்ளன. பல்வேறு கட்டங்களாகவும், நேரடி முறையிலும் கலந்தாய்வு நடத்தப்பட்ட பிறகும் இந்த இடங்கள் ந... மேலும் பார்க்க