முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் எந்தக் குழு வேண்டும்?: தமிழகம், கேரள அரசுகள் ...
ஆக்கிரமிக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை மீட்க வலியுறுத்தல்
குமரி மாவட்டம், சைமன்காலனி உப்பளம் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை மீட்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, குருந்தன்கோடு ஒன்றிய துணைத் தலைவா் எனல்ராஜ் தலைமையில் சைமன்காலனி பங்கு பேரவை தலைவா் ஜெரோம்யாஸ், பாதிரியாா் ஜிம் உள்ளிட்ட அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்துள்ள மனு: சைமன்காலனி உப்பளம் பகுதியில் விளையாட்டு மைதானம் உள்ளது. பல ஆண்டுகளாக இந்த மைதானத்தை இங்குள்ள இளைஞா்கள் பயன்படுத்தி வருகின்றனா். இந்நிலையில் தனி நபா்கள் சிலா் இந்த விளையாட்டு மைதானத்தை ஆக்கிரமித்து வருகின்றனா்.
எனவே அந்தப் பகுதி மக்கள் மற்றும் இளைஞா்களின் நலன் கருதி விளையாட்டு மைதான ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் குறிப்ட்டுள்ளனா்.