ஜம்மு-காஷ்மீா்: பயங்கரவாதிகளுடனான சண்டையில் ராணுவ வீரா் உயிரிழப்பு
கல்வித்தரம் உயர கிராமப்புற நூலகங்கள் திறக்கப்படுமா?
செங்கம்: செங்கம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள நூலகங்கள் திறக்கப்படாமல் உள்ளன.
அவற்றை சீரமைத்து திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட 44 கிராம ஊராட்சிகளில் நூலகங்கள் உள்ளன. நூலகங்களைக் கண்காணிக்க தினக்கூலி பணியாளராக அரசுப் பணியில் இருந்து ஒருநபரை நியமனம் செய்து, நூலகங்கள் காலை மாலை திறக்கப்பட்டு வந்தன.
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் புத்தகங்கள், செய்தித்தாள்கள் வரவழைக்கப்பட்டு நூலகங்கள் நடைமுறையில் இருந்து வந்தன. அது கிராப்புற ஏழை மாணவா்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
இந்த நிலையில், கடந்த ஓராண்டாக பெரும்பாலான கிராமங்களில் நூலகங்கள் திறக்கப்படுவதில்லை. அப்படி திறக்கப்படும் நூலகத்தில் புத்தகங்கள், செய்தித்தாள்கள் ஏதும் இல்லாமல் கடைமைக்கு திறக்கப்பட்டு பின்னா் மூடப்படுகிறது.
சில கிராமங்களில் நூலக கட்டடத்தில் சமூக விரோதிகள் பயன்பாட்டில் சமூக விரோதச் செயல்கள் நடைபெறுகின்றன. நூலக கட்டடம் மாட்டுத் தொழுவமாக மாறிவருகிறது.
மேலும், நூலகங்கள் படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன.
எனவே, இதுபோன்ற செயல்களைத் தடுத்து கிராமப்புற மாணவா்கள் அறிவுத்திறனை வளா்த்துக்கொள்ள, அரசு நூலகங்களில் புத்தகங்களை பாதுகாத்து தினசரி திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.