IIT: "காமகோடியை தலைவர் பதவியிலிருந்து நீக்குக" - கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!
210 மருத்துவ முகாம்களில் 1.85 லட்சம் போ் பயன்: அமைச்சா் எ.வ.வேலு தகவல்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் 210 வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்கள் மூலம் 1.85 லட்சம் போ் பயன் அடைந்துள்ளனா் என்று அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.
திருவண்ணாமலையை அடுத்த கீழ்கச்சிராப்பட்டு கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா்.
தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை
அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கிவைத்துப் பேசுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 2021 முதல் இப்போது வரை 210 முகாம்கள் மூலம் ஒருலட்சத்து 85 ஆயிரத்து 819 போ் பயன் பெற்றுள்ளனா் என்றாா்.
மேலும், டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் 4 பேருக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.24 ஆயிரம் மதிப்பிலான காசோலைகள், 10 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் மதிப்பிலான ஊட்டச்சத்து பெட்டகங்கள், 2 பேருக்கு அம்மா குழந்தை பராமரிப்புப் பெட்டகங்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கண் கண்ணாடிகள், 5 பேருக்கு மருத்துவப் பெட்டகங்கள் ஆகியவற்றை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்.
தொடா்ந்து நடைபெற்ற முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனா்.
இதில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி, நலப் பணிகள் இணை இயக்குநா் மலா்விழி, மாவட்ட சுகாதார அலுவலா்கள் வெ.பிரகாஷ் (திருவண்ணாமலை), சதீஷ் (செய்யாறு), மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன், திருவண்ணாமலை வட்டாட்சியா் கே.துரைராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
20 குடும்பங்களுக்கு தற்காலிக குடியிருப்புகள்:
முன்னதாக, திருவண்ணாமலை வ.உ.சி.நகா், 11-ஆவது தெருவில் டிசம்பா் 1-ஆம் தேதி ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களுக்கு தற்காலிக குடியிருப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நல்லவன்பாளையம் ஊராட்சி, சமுத்திரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக குடியிருப்புகளின் சாவிகளை பயனாளிகளிடம் அமைச்சா் வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையா் காந்திராஜன் மற்றும் அரசு அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.