அறிவியல் ஆசிரியா்களுக்கு பணியிடைப் பயிற்சி
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியா்களுக்கான பணியிடைப் பயிற்சி முகாமின் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு தொழில்நுட்ப மாநில மன்றம், திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரி இணைந்து 5 நாள்கள் இந்தப் பயிற்சி முகாமை நடத்துகிறது. சண்முகா தொழில்சாலை கல்லூரியில் ஜனவரி 24-ஆம் தேதி வரை இந்தப் பயிற்சி முகாமில் நடைபெறும்.
பயிற்சி முகாம் தொடக்க விழாவுக்கு, கல்லூரிச் செயலா்
எல்.விஜய் ஆனந்த் தலைமை வகித்தாா்.
பொருளாளா் எ.ஸ்ரீதா், கல்லூரி முதல்வா் கே.ஆனந்தராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேதியியல் துறைத் தலைவா் அ.தினேஷ் காா்த்திக் வரவேற்றாா்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சி.சுவாமி முத்தழகன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்துப் பேசினாா்.
வேதியியலின் சிறப்புகள், வேதி பாய்ப்பாடுகள் குறித்து திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசுக் கல்லூரியின் இணைப் பேராசிரியா் ஜி.இளங்கோ ஆசிரிய, ஆசிரியைகளுக்கு விளக்கினாா்.
இதில், கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை உதவிப் பேராசிரியா் சே.கவி காருண்யா, வேதியியல் துறை பேராசிரியா்கள் அ.கேசவன், டி.நிா்மலா, சு.மணிகண்டன், பி.தமிழ்ச்செல்வி, பி.கலைச்செல்வி, எல்.ரேவதி, பி.கவிசித்ரா, பி.அஸ்வினி, ஆா்.தீபா மற்றும் திருவண்ணாமலை, செய்யாறு கல்வி மாவட்டங்களைச் சோ்ந்த அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியா்கள் பலா் கலந்து கொண்டனா்.