செய்திகள் :

Rishabh Pant: ``அணியை வழிநடத்தும்போது தோனியின் அந்த ஆலோசனையை..." - லக்னோ கேப்டன் பண்ட்

post image

கடந்த 2022-ல் கார் விபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், கடந்த ஆண்டு அதிலிருந்து முழுமையாக மீண்டு வந்து ஐ.பி.எல்லில் டெல்லி அணிக்கு கேப்டனாக காம்பேக் கொடுத்தார். அதைத்தொடர்ந்து, நேராக டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியில் என்ட்ரி கொடுத்த பண்ட், அடுத்த மாதம் தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியிலும் இடம் பிடித்திருக்கிறார்.

ரிஷப் பண்ட்

இதற்கிடையில், கடந்த டிசம்பரில் ஐ.பி.எல் மெகா ஏலத்துக்கு முன்பாக டெல்லி அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட பண்ட்டை, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ரூ. 27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. அப்போதே, அந்த அணிக்கு பண்ட் தான் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அவ்வாறே லக்னோ அணியின் கேப்டனாக பண்ட் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

கேப்டனாக்கப்பட்ட பின்பு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஊடகத்திடம் பேசுகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பிரபல வார்த்தைகளான, ``ஆட்டத்தின் செயல்முறையில் கவனம் செலுத்தினால் முடிவு தானாக வரும்" என்பதை மேற்கோள் காட்டிய பண்ட், தான் அணியை வழிநடத்தும் போது இந்த ஆலோசனையை நிச்சயம் மனதில் வைத்துக்கொள்வதாகக் கூறினார்.

ரிஷப் பண்ட் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

இதே நிகழ்ச்சியில் பண்ட் குறித்து பேசிய லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, ``ஐ.பி.எல் வரலாற்றில் இவர் சிறந்த வீரராக வருவார். இத்தகைய ஆர்வமுள்ள கிரிக்கெட் வீரரை நான் பார்த்ததில்லை. ஐ.பி.எல்லின் சிறந்த கேப்டனாகவும் ஆவார். அடுத்த 10 - 15 வருடங்களுக்கு இவர் கிரிக்கெட் விளையாடுவார். சென்னை அணியும், மும்பை அணியும் சிறந்த அணி என்கிறார்கள் மக்கள். தோனியும், ரோஹித்தும் மறுக்க முடியாத அளவுக்கு சிறந்த வீரர்கள். என்னுடைய வார்த்தைகளைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள், 10 வருடங்களுக்குப் பிறகு மக்கள் தோனி, ரோஹித், பண்ட் என்று கூறுவார்கள்." என்றார்.

VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/PorattangalinKathai

Virat Kohli: 6 ரன்னில் க்ளீன் போல்ட்; மீண்டும் ஏமாற்றிய கோலி; ரஞ்சியில் தடுமாறும் சீனியர்ஸ்

இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக சொந்த மண்ணில் விளையாடிய டெஸ்ட் தொடரிலும் (NZ 3 - 0), வெளிநாட்டில் விளையாடிய டெஸ்ட் தொடரிலும் (AUS 3 -1) படுமோசமான தோல்வியைச் சந்தித்தது.இந்திய அணியின் இத்தகைய தோல்விக்கு... மேலும் பார்க்க

Champions Trophy : நெருங்கும் டெட்லைன்; மைதானங்களை ரெடி செய்யாத பாக்?- சாம்பியன்ஸ் டிராபி நடக்குமா?

சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது.இந்திய அணியின் போட்டிகளை தவிர மற்ற அனைத்து அணிகளின் போட்டிகளும் பாகிஸ்தானில் வைத்தே நடக்கவிருக்கிறது. சாம்பியன்ஸ் டிராபிக்க... மேலும் பார்க்க

`இந்தத் தலைமுறையின் சிறந்த வீரர் கோலி இல்லையா...' - ரிக்கி பாண்டிங்கின் வாதம் என்ன?

கிரிக்கெட் உலகில் இந்தத் தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேன் இந்தியாவின் விராட் கோலியா, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தா, இங்கிலாந்தின் ஜோ ரூட்டா அல்லது நியூசிலாந்தின் கேன் வில்லியம்சனா என்கிற விவாதம் முடிவி... மேலும் பார்க்க

Karun Nair: ``சாம்பியன்ஸ் டிராபி அல்ல இதுதான் என் இலக்கு" - கருண் நாயர்

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட, சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் சுப்மன் கில்லுக்கு எதற்குத் துணைக் கேப்டன் பதவி உட்பட பல்வேறு கேள்விகள் எழுந்தது.அதில், முக்கியமானது நடந்து முடிந்த விஜய் ஹசாரே ... மேலும் பார்க்க

Kohli: `இந்திய கிரிக்கெட் வீரராக என்ன செய்ய வேண்டும்?’ - சிறுவனின் கேள்வியும் வைரலாகும் கோலி பதிலும்

டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது மோசமான ஃபார்மில் இருக்கும் இந்திய அணியின் சீனியர் வீரர் விராட் கோலி, 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ரஞ்சி டிராபியில் நாளை களமிறங்குகிறார். கோலியுடன் டெஸ்ட் போட்டிகள... மேலும் பார்க்க

``அந்த வீரர்களால் தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாது" - கோலி குறித்து ரெய்னா

சமீபத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி சரியாக விளையாடாததால் பலரும் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டதாக விமர்சித்து வருகின்றனர்.இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்... மேலும் பார்க்க