செய்திகள் :

Sanju: "சஞ்சுவை விட பண்ட் சிறந்த பேட்ஸ்மேன் இல்லை; ஆனால்..." - சஞ்சு தேர்வாகாதது குறித்து கவாஸ்கர்

post image

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணி பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. அதில் ஒன்று கடைசி இரண்டு டெஸ்ட் தொடர்களில் சொதப்பிய இந்திய பேட்மேன்ஸ்களில் ஒருவரான ரிஷப் பண்ட் அணியில் இடம்பெற்றிருப்பது. இதில், சஞ்சு சாம்சனை எடுக்காமல் பண்ட்டை ஏன் எடுத்தீர்கள் என்று கேள்வியெழுவதற்குக் காரணம், சஞ்சு சாம்சன் கடைசியாக விளையாடிய தென்னாப்பிரிக்காவுக்கெதிரான ஒருநாள் போட்டித்தொடரில் ஒரு சதமும், கடைசியாக விளையாடிய ஐந்து டி20 போட்டிகளில் 3 சதமும் அடித்திருக்கிறார்.

ரிஷப் பண்ட் - சஞ்சு சாம்சன்

ஆனால், கார் விபத்துக்குப் பிறகு டி20 உலகக் கோப்பையில் விளையாடத் தொடங்கியது முதல் பண்ட் ஒயிட் பால் போட்டிகளில் எந்தப் போட்டியிலும் பெரிதாக ரன்கள் அடிக்கவில்லை. இதனால்தான், சஞ்சு சாம்சன் ஏன் இல்லை, எதனடிப்படையில் பண்ட் என்ற விவாதம் வெடித்திருக்கிறது. இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், எதற்காக சஞ்சு சாம்சனை விட பண்ட் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்பதைத் தனது பார்வையில் விளக்கியிருக்கிறார்.

Sportstak ஊடகத்திடம் விளக்கிய சுனில் கவாஸ்கர், ``அவரை (சாம்சன்) நீக்க எந்த காரணமும் இல்லை. ஆனால், பண்ட் ஆட்டத்தையே மாற்றக்கூடியவர் என்று நாம் அனைவரும் அறிவோம். மேலும், பண்ட் இடதுகை ஆட்டக்காரராக இருப்பது அவருக்கு ப்ளஸ். அதோடு, சிறந்த விக்கெட் கீப்பரும் கூட. ஆனால், சஞ்சு சாம்சனை விட சிறந்த பேட்ஸ்மேனாக பண்ட் இருக்க முடியாது.

சுனில் கவாஸ்கர்

ஆனால், சஞ்சு சாம்சனை விட பண்ட்டால் ஆட்டத்தை போக்கை மாற்ற முடியும். அதனால்தான் சஞ்சு சாம்சன் எடுக்கப்படவில்லை. இருப்பினும், சஞ்சு சாம்சன் இதற்கு வருத்தப்படக்கூடாது. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் சஞ்சு சாம்சன் மீது அவர் செய்த சாதனையால் அனுதாபம் கொண்டிருக்கிறார்கள்." என்று கூறினார்.

சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்படாதது மற்றும் பண்ட் சேர்க்கப்பட்டது குறித்து உங்களின் கருத்துகளை கமெண்ட்டில் பதிவிடுங்கள்.

VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MaperumSabaithanil

Rishabh Pant: ``அணியை வழிநடத்தும்போது தோனியின் அந்த ஆலோசனையை..." - லக்னோ கேப்டன் பண்ட்

கடந்த 2022-ல் கார் விபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், கடந்த ஆண்டு அதிலிருந்து முழுமையாக மீண்டு வந்து ஐ.பி.எல்லில் டெல்லி அணிக்கு கேப்டனாக காம்பேக் கொடுத்தார். அதைத்தொடர்ந்து, நேராக ... மேலும் பார்க்க

BCCI: உள்ளூர் போட்டிகளில் ஆடும் வீரர்கள் இன்னும் என்னதான் செய்ய வேண்டும்? பாராமுகத்தில் தேர்வுக்குழு

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருக்கும், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.இலங்கை, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கெ... மேலும் பார்க்க

BCCI: விதிகளை அப்டேட் செய்த பிசிசிஐ, அதற்கேற்ப தனது அணியை அப்டேட் செய்திருக்கிறதா?

எப்போதுமே வெற்றிகள் வாழ்த்துகளோடு முற்றுப்பெறும், தோல்விகள்தான் பக்கவிளைவுகளாகத் தொடர் கேள்விகளால் துளைத்தெடுக்கும். இந்திய அணியின் தற்போதைய நிலைமையும் அதுதான். இலங்கைக்கு எதிராக ஒருநாள் தொடரை இழந்தது... மேலும் பார்க்க

Karun Nair: ``என் கனவு இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது; அது நடக்கும் வரை..'' -கம்பேக் கருண் நாயர்

கவுதம் கம்பீர் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு மூன்று மோசமான தோல்விகளைக் கண்ட இந்திய அணி, அவரின் தலைமைப் பயிற்சியின் கீழ் முதல் ஐ.சி.சி தொடரில் விளையாடவுள்ளது. இதன் காரணமாக, ஐ.சி.சி சாம்பியன... மேலும் பார்க்க

'ரிங்கு சிங் உடன் எனது மகளுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை' - பிரியா சரோஜ் தந்தை சொல்வதென்ன?

2023 ஐ.பி.எல்லில் கொல்கத்தா அணிக்காக ஆடியிருந்த ரிங்கு சிங், தன்னுடைய அதிரடி பேட்டிங் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு கேகேஆர் அணிக்கு சாம்பியன் கோப்பையை வென்று கொ... மேலும் பார்க்க

Champions Trophy: நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு; இடம்பிடிப்பாரா கருண் நாயர்? - DK சொல்வதென்ன?

பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஹைபிரிட் மாடலில் அடுத்த மாதம் ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கவிருக்கிறது. போட்டி அட்டவணை ஏற்கெனவே வெளியிடப்பட்ட நிலையில், ஒவ்வொரு அணிகளும் தங்களின் வீரர்களின... மேலும் பார்க்க