உலக சுகாதார நிறுவனத்திலிருந்து விலகுகிறது அமெரிக்கா! பெரும் நிதியிழப்பு ஏற்படும் சூழல்!
உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அமெரிக்கா விலகுவதற்கான உத்தரவில் அந்நாட்டின் புதிய அதிபராக 2-ஆவது முறையாக மீண்டும் பதவியேற்றுக் கொண்ட பின் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
கொவிட்-19 பெருந்தொற்று உள்பட சர்வதேச அளவில் எழுந்த பல சுகாதாரச் சிக்கல்கல் உலக சுகாதார நிறுவனத்தால் சரியாகக் கையாளப்படவில்லை என்ற முக்கிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலக சுகாதார நிறுவனம் சுதந்திரமாகச் செயல்படத் தவறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.