செய்திகள் :

ஆந்திரத்தில் மருந்து ஆலையில் பயங்கர தீ விபத்து!

post image

ஆந்திர மாநிலத்தின், உள்ள பரவாடாவில் உள்ள தனியார் மருந்து ஆலையில் செவ்வாய்க்கிழமை காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

அனகாபல்லி மாவட்டத்தின் பரவாடாவில் உள்ள ஜவஹர்லால் நேரு பார்மா சிட்டியில் உள்ள மெட்ரோகெம் ஏபிஐ தனியார் ஆலையில் காலை 6:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக அனகாப்பள்ளி காவல் கண்காணிப்பாளர் துஹின் சின்ஹா ​​தெரிவித்தார்.

தகவலறிந்து தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீஸார் பெரும் போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் 20 நிமிடங்களில் தீ அணைக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

மேலும், தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறியத் தொழிற்சாலை ஆய்வாளர் மற்றும் வருவாய்த்துறை மற்றும் காவல் துறையைச் சேர்ந்த பிற உள்ளூர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

அசாமில் இரண்டாவது நபருக்கு எச்எம்பிவி தொற்று!

அசாமின் குவஹாத்தியில் 75 வயது பெண்ணுக்கு மெட்டாப்நியூமோவைரஸ் (எச்.எம்.பி.வி) தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்றுக்கு அடுத்ததாக சீனாவில் இருந்து குழந்தைகளைத் தாக்கக்கூடிய எச்எம்பிவி... மேலும் பார்க்க

அமெரிக்க துணை அதிபர் எனக்கு பேரன் முறை உறவு.. ஆந்திர பெண்மணி நெகிழ்ச்சி!

விசாகப்பட்டினம் : அமெரிக்காவின் 50-ஆவது துணை அதிபராக ஜே. டி. வான்ஸ் திங்கள்கிழமை(ஜன. 20) பதவியேற்றுக் கொண்டார். ஜே. டி. வான்ஸின் மனைவி உஷா சிலுகுரி ஆந்திர பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்டவர். அவரின் உறவி... மேலும் பார்க்க

திருப்பதி அன்னப்பிரசாத மெனுவில் புதிய உணவு! ஆனால்..

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் மூலம், பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அன்னப்பிரசாதத்தில், புதிய உணவு ஒன்று சேர்கிறது. இதனால் பக்தர்கள் கூடுதல் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருமலை திருப்பதி தேவஸ்தானத்தி... மேலும் பார்க்க

பேருந்துக்குக் காத்திருந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: பெங்களூரில் அதிர்ச்சி!

பெங்களூரில் பேருந்துக்குக் காத்திருந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரின் கே.ஆர். மார்க்கெட் பகுதியில் ஞாயிறு (ஜன. 19) இரவு 11 மணியளவில் யேலஹங... மேலும் பார்க்க

ஏர் ஹார்ன்: ஓட்டுநர்களுக்கு நூதன தண்டனை அளித்த போலீஸ்!

அதிக ஒலியுடன் மக்களுக்கு இடையூறு தரும் வகையில் ’ஏர் ஹார்ன்’ அடித்த வாகன ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து காவலர் நூதன தண்டனை அளித்துள்ளார்.கர்நாடக மாவட்டம், ஷிமோகா மாவட்டத்தைச் சேர்ந்த போக்குவரத்து உதவி ஆய... மேலும் பார்க்க

இலவச கல்வி, காப்பீடு.. பாஜகவின் அனல் பறக்கும் 2வது தேர்தல் வாக்குறுதி!

தலைநகர் தில்லியில் பேரவைத் தேர்தல் நிகழவுள்ள நிலையில், பாஜகவில் இரண்டாவது தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் மூத்த தலைவரான அனுராக் தாக்கூர் வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், அர... மேலும் பார்க்க