செய்திகள் :

Siragadikka Aasai: மலேசியா மாமா சொன்ன விஷயம்; அதிர்ந்த குடும்பம், டிடெக்டிவ் ஆன முத்து

post image
சிறகடிக்க ஆசை சீரியல் விறுவிறுப்பானக் கட்டத்தில் சென்றுகொண்டிருக்கிறது. நேற்றைய எபிசோடில் வீட்டின் மூன்று தம்பதிகளுக்குள் இருந்த மனஸ்தாபத்தை பாட்டித் தீர்த்து வைத்துவிட்டு கிளம்புகிறார்.

வீட்டில் ஒரு பாரம்பரியத் தொட்டிலைக் கொண்டு வந்து வைக்கிறார். மூன்று மருமகள்களில் யார் முதலில் குழந்தையை அந்த தொட்டிலில் போடுகிறார் என்று பார்க்கலாம் என்று செல்லமாகச் சொல்கிறார் பாட்டி. அப்போது ஸ்ருதி தனக்கு குழந்தை பிரசவிப்பதில் பயம் என்றும், வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறேன் என்றும் சொல்கிறார். ஸ்ருதி சொன்னதைக் கேட்டு அனைவரும் அதிர்கின்றனர்.

Siragadikka aasai

அண்ணாமலை பொறுமையாக எடுத்துச் சொல்கிறார். வாடகை தான் முறை என்பது உடல் நலப் பிரச்னையால் குழந்தை பிரசவிக்கும் நிலையில் இல்லாத பெண்களால் பயன்படுத்தப்படும் முறை என்கிறார். ஆனாலும் ஸ்ருதி பயம் காரணமாகவும், வலியைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதாலும் தனக்குக் குழந்தை பிரசவிப்பதில் விருப்பமில்லை என்கிறார். அனைவரும் என்ன சொல்வதென்று தெரியாமல் அதிர்ந்து நிற்கின்றனர்.

ஸ்ருதி அம்மாவிடம் இதனை சொல்லி நியாயம் கேட்கவேண்டும் என்று சொன்ன விஜயாவிடம், ஸ்ருதி போக போக யதார்த்தத்தை புரிந்துகொள்வார், கொஞ்ச நாள் போகட்டும் என்கிறார் பாட்டி.

மண்டப அலங்காரம் செய்யும் இடத்தில் மீனாவுக்கு சிந்தாமணி அடியாட்களை வைத்து பிரச்னை செய்கிறார். மீனா பயந்து ஓடிவிடுவார் எனக் கனவு காண்கிறார் சிந்தாமணி. ஆனால் மீனாவும் உடன் இருப்பவர்களும் துடைப்பத்தைக் கொண்டு அடியாட்களை அடிக்கின்றனர். என் உழைப்பை உங்களால் நிறுத்த முடியாது என்று சிந்தாமணியிடம் சபதம் செய்கிறார் மீனா.

Siragadikka aasai

மற்றொருபுறம் முத்துவுக்கு ரோகிணி மீதுள்ள சந்தேகம் அதிகரித்துக்கொண்டே போகிறது. கடந்த ஞாயிறன்று வெளியான புரோமோவில் முத்துவும் மீனாவும் திட்டம் போட்டு ரோகிணியை பற்றிய உண்மைகளை வெளியே கொண்டு வர மும்முரம் காட்டுகின்றனர்.

மலேசியாவுக்குப் போக உள்ளதாக முத்து அண்ணாமலையிடம் சொல்கிறார். ரோகிணியின் அப்பா மலேசியாவில் ஜெயிலில் இருக்கும்போது, சம்மந்தி வீட்டில் யாருமே வந்து பார்க்கவில்லையே என்று அவர் தவறாக நினைக்கப் போகிறார் என முத்து விஜயாவிடம் சொல்கிறார்.

விஜயாவும் ஆமாம் போக வேண்டும் என்று சொல்கிறார். ஆனால் ரோகிணி அப்படியெல்லாம் பார்க்க முடியாது என்று மனோஜிடம் சொல்லி வீட்டில் யாரும் மலேசியாவுக்குப் போக வேண்டாம் என்று சொல்ல சொல்கிறார். மனோஜும் விஜயாவிடம் யாரும் மலேசியா போக வேண்டாம் என்று சொல்கிறார். அதோடு புரோமோ முடிகிறது.

Siragadikka aasai

தற்போது வெளியாகியுள்ள புரோமோவில் முத்துவிடம் மாட்டிக்கொள்ளப் போகிறோம் என்ற பயத்தில் மலேசியா மாமாவை வைத்துப் புதிய நாடகத்தை அரங்கேற்றுகிறார். ரோகிணியின் எதிர்ப்பை மீறி, முத்து அனைவரும் மலேசியா போகலாம் என டிக்கெட் போடுகிறார்.

ஆனால் ரோகிணி அதைத் தடுக்க மலேசியா மாமாவை வீட்டிற்கு வர வைக்கிறார். அவர் ரோகிணி அப்பா ஜெயிலில் கொல்லப்பட்டதாகப் பொய் சொல்கிறார். ரோகிணி அப்பாவின் தொழில் எதிரிகள் அனைவரும் சேர்ந்து அவரைக் கொன்று விட்டதாகக் கதைவிடுகிறார். அதுமட்டுமின்றி ரோகிணி மலேசியா வந்தால் அவரையும் அவர்கள் கொன்றுவிடுவார்கள் எனச் சொல்கிறார். இதைக் கேட்ட அண்ணாமலை முத்துவிடம் டிக்கெட்டை கேன்சல் செய்யச் சொல்கிறார்.

Siragadikka aasai

ரோகிணி நடிக்கிறார், பொய் சொல்கிறார் என முத்து மீனாவிடம் சொல்கிறார். இதோடு புரோமோ முடிகிறது.

அடுத்தடுத்த எபிசோடுகள் விறுவிறுப்பாக இருக்கும். முத்து எப்படி ரோகிணி நாடகத்தை கண்டுபிடிக்கப் போகிறார், ரோகிணி அதை எப்படி சமாளிப்பார்? ரோகிணியின் மலேசியா கதை பொய் என்று தெரிய வந்தால் விஜயா எப்படி ரியாக்ட் செய்வார்? இந்தக் கேள்விகளுக்கான விடை இந்த வார இறுதியில் தெரியவரும்.

BB Tamil 8: அன்ஷிதா குறிப்பிட்ட காயப்படுத்திய நபர் யார்? -அர்னவ் சொல்லும் பதில்

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 ன் கிராண்ட் ஃபினாலே கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்தது நினைவிருக்கலாம்.அப்போது, `பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியில் சென்றதும் செய்த முதல் வேலை என்ன?' என ஒவ்வொரு போட்டியாளரிடமும் ... மேலும் பார்க்க

BB Tamil 8: ``அன்னைக்கு சிரிச்சதுக்கான உண்மைக் காரணம் இதுதான்" - ஜாக்குலின் எவிக்சன் குறித்து சத்யா

விஜய் டிவியில் கடந்தாண்டு அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 8 கடந்த ஞாயிற்றுக் கிழமை நிறைவு பெற்றது.முதல் நாள் பதினெட்டு பேர் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் 6 பேர் என மொத்தம் 24 பேர்... மேலும் பார்க்க

BB Tamil 8: `தினசரி 50 ஆயிரம் முதல் 10 ஆயிரம்' யாருக்கு எவ்வளவு சம்பளம்? - முழு விவரம்

விஜய் டிவியில் கடந்தாண்டு அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 8 கடந்த ஞாயிற்றுக் கிழமை நிறைவு பெற்றது.முதல் நாள் 18 போட்டியாளர்கள் பிறகு வைல்டு கார்டு என்ட்ரி மூலம் 6 பேர் என 24 பேர... மேலும் பார்க்க

BB Tamil 8: 'இது முடிவல்ல, வெறும் ஆரம்பம்தான்' - பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் சௌந்தர்யாவின் பதிவு

கடந்த அக்டோபர் 6-ம் தேதி ஒளிப்பரப்பாகத் தொடங்கிய 'பிக் பாஸ்' சீசன் 8 நிகழ்ச்சியின் 'Bigg Boss 8 Grand Finale' நேற்று முன்தினம் ( ஜனவரி 19) இரவு நடைபெற்றது.மொத்தம் 24 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்த இந்த... மேலும் பார்க்க

BB Tamil 8: "நிஜமாகவே இவ்வளவு அன்பும் எனக்கா?" - டைட்டில் வென்ற பிறகு முத்து வெளியிட்ட முதல் வீடியோ

பிக் பாஸ் சீசன் 8 முடிவடைந்திருக்கிறது.பிக் பாஸ் 8-வது சீசனின் இறுதி எபிசோட் நேற்றைய தினம் ஒளிபரப்பப்பட்டது. இந்த சீசனின் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் மக்களின் ஓட்டுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்... மேலும் பார்க்க

Robo Shankar: இந்திரஜாவிற்கு ஆண் குழந்தை; உற்சாகத்தில் ரோபோ சங்கர் குடும்பம்!

சின்னத்திரை, வெள்ளித்திரை எனப் பரிச்சயமானவர் ரோபோ சங்கர். வெள்ளித்திரையில் வலம் வந்து கொண்டிருக்கும் இவரின்ஒரே மகள்இந்திரஜா ரோபோ சங்கர். `பிகில்' திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். `ச... மேலும் பார்க்க