செய்திகள் :

BB Tamil 8: அன்ஷிதா குறிப்பிட்ட காயப்படுத்திய நபர் யார்? -அர்னவ் சொல்லும் பதில்

post image
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 ன் கிராண்ட் ஃபினாலே கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்தது நினைவிருக்கலாம்.

அப்போது, `பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியில் சென்றதும் செய்த முதல் வேலை என்ன?' என ஒவ்வொரு போட்டியாளரிடமும் விஜய் சேதுபதி கேட்டார்.

அப்போது அன்ஷிதா, ‘இந்த சீசனின் மூன்றாவது வாரத்திலிருந்தே என் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியது. நிறைய யோசித்தேன். இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் ஒருவர் என்னை ரொம்பவே காயப்படுத்தியிருந்தார். அந்த நபர் இனி என் வாழ்க்கைக்கு வேண்டுமா? வேண்டாமா? என இந்த வீடு என்னை யோசிக்க வைத்தது. பிக் பாஸ் முடிந்து வெளியில் வந்ததும் நேராக அந்த நபரைத்தான் போய்ப் பார்த்தேன். அவரிடம் ,நீங்கள் இனி என் வாழ்க்கைக்குத் தேவையில்லை என தைரியமாகச் சொல்லி விட்டு வந்தேன்’ எனப் பதில் சொல்லியிருந்தார்.

அன்ஷிதாவின் இந்தப் பதில் ரொம்பவே வைரலானது. அவர் நேரடியாக பெயரைக் குறிப்பிடாவிட்டாலும் அவர் சுட்டிக்காட்டும் நபர் நடிகர் அர்னவ்தான் எனப் பலரும் கூறினர்.

விஷால் - அன்ஷிதா
விஷால் - அன்ஷிதா

சில ஆண்டுகளுக்கு முன் அர்னவ் அவரது மனைவி திவ்யா இடையே பிரச்னை வந்து அந்தச் செய்தி, போலீஸ் ஸ்டேஷன், மீடியா என வந்த போது கூடவே அன்ஷிதா அர்னவ் திவ்யா மூவரும் பேசிய ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்தன.

’ஆமா அர்னவ் கூடத்தான் நான் இருப்பேன், உன்னால என்ன செய்ய முடியும்’ என திவ்யாவிடம் அன்ஷிதா பேசிய ஆடியோக்கள் இப்போது கூட சமூக வலைதளங்களில் சிலர் பகிர்ந்திருந்தனர்.

ஒருகட்டத்தில் திவ்யா அர்னவைப் பிரிந்து தனியே வாழத் தொடங்கிவிட, அன்ஷிதாவும் அர்னவும் தனியே வீடு எடுத்து வசிக்கத் தொடங்கினார்கள்.

பிக்பாஸ் சீசன் 8 க்கு அர்னவும் அன்ஷிதாவும் தேர்வான போதுகூட சென்னை புற நகரில் இருவரும் ஒரே வீட்டில்தான் வசிப்பதாகச் சொல்லப்பட்டது. இந்நிலையில், தற்போது அன்ஷிதா இப்படிப் பேசக் காரணம் என்ன? அன்ஷிதா அர்னவ் இருவருக்கும் பொதுவான சிலரிடம் பேசினோம்.

‘’அர்னவ் திவ்யா அன்ஷிதா முக்கோணச் சண்டை வளர்ந்து விவகாரம் கோர்ட் வரை போனப்ப கடைசியா சில மாதங்களுக்கு முன் கோர்ட்டுல ஆஜர் ஆனார் அர்னவ். அப்பக்கூட உடன் அன்ஷிதாவும் இருந்தாங்க. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு வரை ரெண்டு பேருக்குமிடையில் எந்தப் பிரச்னையுமில்ல. அர்னவுக்கு அன்ஷிதா ரொம்பவே சர்ப்போர்ட்டா இருந்தாங்க. இது ஃபீல்டுல பரவலா தெரியும். ஆனா அந்த நிகழ்ச்சிக்குப் போன பிறகு அந்த வீட்டுல என்ன நடந்துச்சுனு தெரியலை. அர்னவ் ரெண்டாவது வாரம் பிக் பாஸ் விட்டுல இருந்து வெளியில வந்தார். அன்ஷிதாவோ `மூணாவது வாரத்துல இருந்து தன் வாழ்க்கை மாறத் தொடங்குச்சு’ என்கிறார். அந்த வீட்டுக்குள் என்ன நடந்துச்சோ தெரியலைங்க" என்கிறார்கள் அவர்கள்.

அர்னவ் திவ்யா

அர்னவின் நட்பு வட்டத்தில் சிலரோ, ``அர்னவுக்கு முன்பே அன்ஷிதாவுக்கு இன்னொரு நண்பர் இருந்தார். அவர் மலையாள சீரியல்ல நடிச்சிட்டிருக்கிறதா கூடச் சொன்னாங்க. அதனால அன்ஷிதா குறிப்பிட்டது அர்னவைத்தானானே தெரியலையே" என்றனர்.

அர்னவிடமே இதுகுறித்துக் கேட்கலாமென தொடர்புகொண்டு கேட்டோம்.

`அவங்க பர்சனல் குறித்து எனக்கு எதுவும் தெரியாதுங்க' என்றவர், இப்போது அன்ஷிதாவுடன் நட்பு தொடர்கிறதா என்கிற கேள்விக்கு `நோ கமெண்ட்ஸ்' எனச் சொல்லி விட்டார்

இதற்கிடையில் பிக் பாஸ் வீட்டில் வைத்து விஷால் அன்ஷிதா இடையே லவ் என்றொரு பேச்சும் இப்போது கிளம்பியதை அன்ஷிதாவே மறுத்திருக்கிறார்.

BB Tamil 8: ``அன்னைக்கு சிரிச்சதுக்கான உண்மைக் காரணம் இதுதான்" - ஜாக்குலின் எவிக்சன் குறித்து சத்யா

விஜய் டிவியில் கடந்தாண்டு அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 8 கடந்த ஞாயிற்றுக் கிழமை நிறைவு பெற்றது.முதல் நாள் பதினெட்டு பேர் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் 6 பேர் என மொத்தம் 24 பேர்... மேலும் பார்க்க

Siragadikka Aasai: மலேசியா மாமா சொன்ன விஷயம்; அதிர்ந்த குடும்பம், டிடெக்டிவ் ஆன முத்து

சிறகடிக்க ஆசை சீரியல் விறுவிறுப்பானக் கட்டத்தில் சென்றுகொண்டிருக்கிறது. நேற்றைய எபிசோடில் வீட்டின் மூன்று தம்பதிகளுக்குள் இருந்த மனஸ்தாபத்தை பாட்டித் தீர்த்து வைத்துவிட்டு கிளம்புகிறார்.வீட்டில் ஒரு ... மேலும் பார்க்க

BB Tamil 8: `தினசரி 50 ஆயிரம் முதல் 10 ஆயிரம்' யாருக்கு எவ்வளவு சம்பளம்? - முழு விவரம்

விஜய் டிவியில் கடந்தாண்டு அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 8 கடந்த ஞாயிற்றுக் கிழமை நிறைவு பெற்றது.முதல் நாள் 18 போட்டியாளர்கள் பிறகு வைல்டு கார்டு என்ட்ரி மூலம் 6 பேர் என 24 பேர... மேலும் பார்க்க

BB Tamil 8: 'இது முடிவல்ல, வெறும் ஆரம்பம்தான்' - பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் சௌந்தர்யாவின் பதிவு

கடந்த அக்டோபர் 6-ம் தேதி ஒளிப்பரப்பாகத் தொடங்கிய 'பிக் பாஸ்' சீசன் 8 நிகழ்ச்சியின் 'Bigg Boss 8 Grand Finale' நேற்று முன்தினம் ( ஜனவரி 19) இரவு நடைபெற்றது.மொத்தம் 24 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்த இந்த... மேலும் பார்க்க

BB Tamil 8: "நிஜமாகவே இவ்வளவு அன்பும் எனக்கா?" - டைட்டில் வென்ற பிறகு முத்து வெளியிட்ட முதல் வீடியோ

பிக் பாஸ் சீசன் 8 முடிவடைந்திருக்கிறது.பிக் பாஸ் 8-வது சீசனின் இறுதி எபிசோட் நேற்றைய தினம் ஒளிபரப்பப்பட்டது. இந்த சீசனின் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் மக்களின் ஓட்டுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்... மேலும் பார்க்க

Robo Shankar: இந்திரஜாவிற்கு ஆண் குழந்தை; உற்சாகத்தில் ரோபோ சங்கர் குடும்பம்!

சின்னத்திரை, வெள்ளித்திரை எனப் பரிச்சயமானவர் ரோபோ சங்கர். வெள்ளித்திரையில் வலம் வந்து கொண்டிருக்கும் இவரின்ஒரே மகள்இந்திரஜா ரோபோ சங்கர். `பிகில்' திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். `ச... மேலும் பார்க்க