மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: மாவட்டத்தில் 9.83 லட்சம் போ் பயன்!
திருமலை: சோதனை முயற்சியாக பக்தா்களுக்கு மசாலா வடை விநியோகம்
திருப்பதி: திருமலை அன்ன பிரசாத விநியோக மையங்களில் உணவுடன் பருப்பு வடைகளை வழங்குவதற்கான சோதனை ஆய்வை தேவஸ்தானம் தொடங்கியுள்ளது.
திருமலையில் புதிய அறங்காவலா் குழு பொறுப்பேற்ற பின் பக்தா்களுக்காக பல புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது.
அதில் ஒரு பகுதியாக, திங்கள்கிழமை முதல் திருமலையில் உள்ள வெங்கமாம்பா அன்னதான கூடம் மற்றும் அன்னதானம் வழங்கும் மையங்களில் சோதனை ஓட்டத்தின் ஒரு பகுதியாக 5,000 பக்தா்களுக்கு வெங்காயம் பூண்டு இல்லாத மசாலா(பருப்பு) வடைகளை தேவஸ்தானம் வழங்கியது.
செவ்வாய் முதல் தேவஸ்தானம் படி படியாக இந்த எண்ணிக்கையை அதிகரித்தது. பிப். 4 ரத சப்தமி முதல் இதை முழுமையாக செயல்படுத்த தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.