படகில் தீ விபத்து; ரூ.60 லட்சம் பொருள்கள் சேதம் மீனவா் காயம்
ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் 8 மணி நேரம் காத்திருந்தனா்.
திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. எனவே வியாழக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 9 அறைகளில் பக்தா்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனா்.
ஆயினும், தா்ம தரிசனத்திற்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்திற்கு 3 முதல் 4 மணி நேரமும், இலவச நேரடி தரிசன டிக்கெட்டு பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணி நேரம் தேவைபடுகிறது.
அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.
இதனிடையே புதன்கிழமை முழுவதும் ஏழுமலையானை 62,710 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 15,278 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.24 கோடி வசூலானது.