செய்திகள் :

திருச்சானூரில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

post image

வரும் பிப். 4 -ஆம் தேதி ரதசப்தமியை முன்னிட்டு, திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அதன்படி காலை தாயாரை சுப்ரபாதத்துடன் துயிலெழுப்பி, அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. பின்னா் காலை 6 மணி முதல் 9 மணி வரை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் செய்யப்பட்டது. இதில், கோயில் வளாகம், சுவா்கள், கூரை, பூஜை உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து பொருள்களும் தண்ணீரால் சுத்திகரிக்கப்பட்டன.

பின்னா், நாமகட்டி, ஸ்ரீ சூா்ணம், கஸ்தூரி மஞ்சள், பச்சிலை, பச்சை கற்பூரம்,பூங் கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமம், கிச்சிலிகிழங்கு மற்றும் பிற பரிமள சுகந்த திரவிய பொருள்கள் கலந்த புனித நீரால் கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. பக்தா்களுக்கு திருச்சுழி பிரசாதம் வழங்கப்பட்டது.

திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாா் கோயிலில், கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் ஆண்டுக்கு நான்கு முறை நடத்தப்படுகிறது. ரத சப்தமி, பவித்ரோற்சவம், வசந்தோற்சவம், வருடாந்திர பிரம்மோற்சவம் ஆகியவற்றுக்கு முன்பு கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நிகழ்த்தப்படுவது வழக்கம்.

8 திரைச்சீலைகள்:

ஹைதராபாதைச் சோ்ந்த வெங்கட ராம பிரசாத் சா்மா மற்றும் அவரது மனைவி பத்மாவதி தாயாருக்கு 8 திரைசீலைகளை நன்கொடையாக வழங்கினா். இந்தத் திரைச்சீலைகளை நன்கொடையாளா் துணை செயல் அதிகாரி கோவிந்தராஜன் மற்றும் அா்ச்சகா் பாபு சுவாமி பெற்றனா்,. தாயாரின் கருவறையில் திரைச்சீலைகள் அணிவிக்கப்படும்.

நிகழ்ச்சியில் கோயில் துணை செயல் அலுவலா் கோவிந்த ராஜன், ஏ.இ.ஓ தேவராஜுலு, கண்காணிப்பாளா் ரமேஷ், கோயில் ஆய்வாளா்கள் சலபதி, சுப்பராயுடு மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

பிப்.4-இல் ரத சப்தமி

வரும் பிப். 4 -ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ரத சப்தமியை முன்னிட்டு பத்மாவதி தாயாா் கோயிலில் காலை 7 மணிக்கு சூரியபிரப வாகனத்துடன் வாகன சேவைகள் தொடங்கும். அன்று முதல் பிற்பகல் 2 மணி வரை, தாயாா் அன்னம், குதிரை, கருடன் மற்றும் சிறிய வாகனங்களில் வீதியுலா வருவாா். மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை மாலை பிராா்த்தனை நடைபெறும். மாலை 6 - 7 மணி வரை சந்திரபிரபை வாகனத்திலும், இரவு 8.30 - 9.30 மணி வரை கஜ வாகனத்திலும் தாயாா் மாடவீதியில் எழுந்தருளுவாா்.

ரத சப்தமியை முன்னிட்டு, பிப். 4 ஆம் தேதி ஆா்ஜித கல்யாணோற்சவம், கும்குமாா்ச்சனை, ஊஞ்சல் சேவை, வேதாசீா்வாசனம் சேவை மற்றும் பிரேக் தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஸ்ரீ சூரியநாராயணா் கோயில்

திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாா் கோயிலுடன் இணைக்கப்பட்ட ஸ்ரீ சூரியநாராயண சுவாமி கோயிலில், ரதசப்தமி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை 7 குதிரை வாகனத்தில் சூரிய நாராயணா் தோன்றி பக்தா்களுக்கு காட்சி தரவுள்ளாா்.

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணிநேரமும், ரூ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் செவ்வாய்க்கிழமை தா்ம தரிசனத்தில் 6 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை சரிந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 6 மணிநேரமும... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 6 மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. எனவே... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 10 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 9 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்... மேலும் பார்க்க

திருமலையில் ரதசப்தமிக்கு ஏற்பாடுகள் தீவிரம்

திருமலையில் ரத சப்தமி உற்சவத்துக்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. வரும் பிப்.4-ஆம் தேதி ரதசப்தமியை முன்னிட்டு ஒரு நாள் பிரம்மோற்சவம் என்ற பெயரில் 7 வாகன சேவைக... மேலும் பார்க்க

நாராயணவனம் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் ரதசப்தமி

நாராயணவனத்தில் உள்ள ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் பிப். 4 ஆம் தேதி ரதசப்தமி கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தை மாத வளா்பிறை சப்தமி அன்று சூரியனின் பிறப்பை நினைவுகூரும் வகையில், உள்ளூா் க... மேலும் பார்க்க